வலைதளங்களால் பாதிக்கும் பெண்கள் விழிப்புணர்வு கையேடு வெளியிட்ட போலீஸ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வலைதளங்களால் பாதிக்கும் பெண்கள் விழிப்புணர்வு கையேடு வெளியிட்ட போலீஸ்

Added : மே 21, 2019

சென்னை, சமூக வலைதளங்கள் வாயிலாக காதல் வலை வீசி பெண்களை பலாத்காரம் செய்யும் குற்றங்கள் அதிகரித்து வருவதால் போலீசார் விழிப்புணர்வு கையேடு தயாரித்து வினியோகம் செய்து வருகின்றனர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 'பேஸ்புக் வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்கள் வாயிலாக காதல் வலை வீசி 100க்கும் மேற்பட்ட பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு 25 என்பவர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு 'பேஸ்புக் வாட்ஸ் ஆப் டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்கள் முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றன.அவற்றை பயன்படுத்துவோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசார் கையேடுகளை தயாரித்து மக்கள் கூடும் இடங்களில் வினியோகம் செய்து வருகின்றனர்.கையேட்டில் கூறப்பட்டுள்ள அறிவுரைகள்:* 'பேஸ்புக் வாட்ஸ் ஆப் டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்களில் நண்பர்களாக ஏற்கும்படி அழைப்பு விடுப்போரின் பின்னணியை ஆராய வேண்டும். சந்தேகப்படும்படியான நபர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டாம்* பிரபலங்களின் பெயர்களில் விஷமிகள் வலை வீசுவர்; நம்பிவிட வேண்டாம். படித்தவர் நல்ல வேலையில் இருக்கிறார் என்பதற்காகவே எவரையும் நம்ப வேண்டாம்* சொந்த விருப்பு வெறுப்புகளை பதிவேற்றம் செய்ய வேண்டாம். அளவுக்கு அதிகமான நட்பு வட்டாரங்களை ஏற்படுத்த வேண்டாம்* பாலியல் ரீதியாக தொல்லை தருவோர் குறித்து காவல் துறையினரிடம் தெரிவிக்க வேண்டும். சமூக வலைதளங்களை பயன்படுத்தும் 13 - 25 வயதுடைய ஆண் பெண்களை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்* தங்களது மற்றும் குடும்பத்தாரின் படங்களை பதிவேற்றுதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட வலைதளத்தை பயன்படுத்தும் பெண்கள் தங்கள் படங்களை அவற்றில் வௌியிடுவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X