பொது செய்தி

தமிழ்நாடு

பொன்னர் சங்கர் கோவில் விழா: தேவம்பாடிவலசில் துவக்கம்

Added : மே 21, 2019
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, தேவம்பாடிவலசு கிராமத்தில், அம்மன் அழைத்தல் நிகழ்வுடன் பொன்னர் - சங்கர் கோவில் திருவிழா துவங்கியது.
பொள்ளாச்சி அருகே, தேவம்பாடிவலசு கிராமத்தில், அண்ணன்மார் எனும் பெயர் கொண்ட, 'பொன்னர் - சங்கர்' கோவில் அமைந்துள்ளது. கோவில் நுழைவு வாயிலில், மகாகணபதி, கன்னிமார், நல்லதங்காள் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் வைகாசி மாதம் கோவில் திருவிழா நடக்கிறது. நடப்பு ஆண்டுக்கான திருவிழா கடந்த, 20ம் தேதி இரவு அம்மன் அழைத்தலுடன் துவங்கியது இரவு, 9:30 மணிக்கு வீட்டுக்கோவிலில் இருந்து பெரியகாண்டியம்மன், நல்லதங்காள் கரகங்கள் புறப்பட்டன.
தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு பொங்கலிடல், 8:00 மணிக்கு கொம்பனுக்கு பொங்கலிடுதல், பகல், 2:00 மணிக்கு தீர்த்தம் கொண்டு வருதல் நிகழ்ச்சியும் நடந்தது.இன்று, அதிகாலை, 3:00 மணிக்கு அம்மன் அழைத்தல் மற்றும் கரக பூஜையுடன் மூன்றாம் நாள் விழா துவங்குகிறது. 3:30 மணிக்கு அபிேஷக பூஜை, 4:00 மணிக்கு பால் பூஜை, 4:30க்கு இளநீர் பூஜை, காலை, 6:00 மணிக்கு கிளி வேட்டைஉள்பட இரவு,7:00 மணி வரை பல்வேறு பூஜைகள் நடக்கிறது. இரவு, 10:00 மணிக்கு படக்களம் திருக்கோவிலில் இருந்து, வீட்டுக்கோவிலுக்கு வாண வேடிக்கையுடன் புறப்படுகிறது. முன்னதாக, இன்று காலை, 8:00 மணி முதல் அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பொதுமக்களும், விழா கமிட்டியினரும் மேற்கொண்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X