பொது செய்தி

தமிழ்நாடு

அரசு நிதியின்றி மக்கள் கட்டிய கலையரங்கம் 'தினமலர்' நாளிதழுக்கு கிராம மக்கள் புகழாரம்

Added : மே 21, 2019
Share
Advertisement

கமுதி : கமுதி அருகே சாமிபட்டியில் கிராம மக்கள் அரசு நிதியின்றி வரி வசூல் செய்து 8 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கலையரங்கம் அமைத்து திறப்பு விழா நடத்தினர். விழாவிற்கு ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். பொன்னுச்சாமி, கிராம தலைவர் தருமர், துணை தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் மணிமுத்து முன்னிலை வகித்தனர். பொருளாளர் வேல்முருகன் வரவேற்றார்.

சாமிபட்டியில் கிராம, பள்ளி விழாக்களை நடத்த பந்தல்கள் அமைக்க ஒவ்வொரு திருவிழாவிற்கும் லட்சக் கணக்கில் செலவு செய்து வந்தனர். விழா செலவில் பெருந்தொகையை மேடைக்காக செலவு செய்யும் நிலை ஏற்பட்டதால் அரசு சார்பில் கலையரங்கம் அமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் கிராம மக்கள் முறையீடு செய்தனர். ஆனால் கலையரங்கம் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் கிராம மக்கள் 8 லட்சம் ரூபாய் வரி வசூல் செய்து கலையரங்கை கட்டி முடித்தனர். நேற்று திறப்பு விழா நடத்தினர். மகளிர் மன்ற நிர்வாகிகள் சிகிர்தா, மந்தேஸ்வரி, சித்திரைசெல்வி, பேரையூர் மகளிர் மன்ற தலைவி ரூபி குத்துவிளக்கேற்றினர். மகேந்திரன், அர்ச்சுணன், கோவிந்தராஜ் அன்னதானத்தை வழங்கினர். நிகழ்ச்சியில் கலையரங்க நிர்வாகிகள் ஊர்காலன், காந்தி, மணிமுத்து, முத்துக்குமார், கடல்வேல், பாலமுருகன், வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கிராம மக்கள் கூறுகையில், 'தினமலர்' நாளிதழ் இதுகுறித்து வெளியிட்ட செய்தி உதவியால் வெளியூர் மக்கள் அதிகளவில் நிதி வழங்கியதால் விரைவில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடத்தி இருக்கிறோம். இதற்காக 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி தெரிவிக்கிறோம், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X