மசூத் அஸார் மீதான நடவடிக்கை; ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் பாராட்டு

Updated : மே 22, 2019 | Added : மே 22, 2019 | கருத்துகள் (2)
Advertisement

நியூயார்க் : 'அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டது மிகப் பெரிய சாதனை' என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.






அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸார். ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில் 40 சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் மீதான தற்கொலை படை தாக்குதல் உள்பட நம் நாட்டில் நடந்துள்ள பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் இந்த அமைப்புக்கு தொடர்பு உள்ளது.

மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கடந்த 10 ஆண்டுகளாக நம் அரசு முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இது தொடர்பான தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டபோது பாக். ஆதரவு நாடான சீனா எதிர்ப்பு தெரிவித்து வந்தது. சமீபத்தில் அமெரிக்கா பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்தை தாக்கல் செய்தன.





சீனா தனது எதிர்ப்பை விலக்கி கொண்டதால் மே 1ல் இந்தத் தீர்மானம் நிறைவேறியது. இதைத் தவிர ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தெற்காசிய கிளையாக கருதப்படும் பாக். கைச் சேர்ந்த பயங்கரவாதி தலைமையிலான ஐ.எஸ். கொராசன் அமைப்புக்கும் பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது.

இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நியூயார்க்கில் நடந்தது. அப்போது மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்ததற்கு அதன் உறுப்பு நாடுகள் பாராட்டு தெரிவித்தன. ஐ.நா. வுக்கான அமெரிக்க துாதர் ஜொனாத்தன் கோஹன் உள்ளிட்டோர் பாதுகாப்பு கவுன்சிலின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து பேசினர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-மே-201908:52:12 IST Report Abuse
Chandran he should be punished early that is important
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - bengalooru,இந்தியா
22-மே-201907:45:29 IST Report Abuse
 nicolethomson இனி மசூதி அசார் அவன் அப்பா பேரை மாத்திக்கிட்டு நான் அவனில்லை என்று சுத்துவான் பாகிஸ்தான் கூட இது அவன் இல்லை என்று சொல்லும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X