இந்தியா

வழக்கை, 'வாபஸ்' பெற அனில் அம்பானி முடிவு

Updated : மே 22, 2019 | Added : மே 22, 2019 | கருத்துகள் (23)
Advertisement
வழக்கை, 'வாபஸ்' பெற அனில் அம்பானி முடிவு

ஆமதாபாத், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு எதிராக தொடர்ந்த அவதுாறு வழக்கை திரும்ப பெற, தொழில் அதிபர், அனில் அம்பானி முடிவு செய்துள்ளார்.ரிலையன்ஸ் நிறுவன அதிபர், அனில் அம்பானி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், சுனில் ஜாக்கர், ரண்தீப்சிங் சுர்ஜேவாலா, அசோக் சவான், உம்மன் சாண்டி மற்றும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை ஆசிரியர் ஆகியோருக்கு எதிராக, குஜராத் மாநிலம், ஆமதாபாத் நீதிமன்றத்தில், அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.





'ரபேல்' போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, தன் மீதும், தங்கள் நிறுவனத்தின் மீதும், அவதுாறாக, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில், காங்., தலைவர்கள், கட்டுரை எழுதியுள்ளதாகவும், பேட்டி அளித்திருப்பதாகவும் குறிப்பிட்ட அம்பானி, இதற்காக இவர்கள், 5,000 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்றும், மனுவில் கூறியிருந்தார்.இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு எதிரான அவதுாறு வழக்கை திரும்பப் பெற, அனில் அம்பானி முடிவு செய்துள்ளார். வழக்கை வாபஸ் பெறுவதற்கான நடைமுறைகள் துவங்கியுள்ளதாக,அம்பானியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
27-மே-201914:04:30 IST Report Abuse
meenakshisundaram தேவையே இல்லை.பொய் பிரசாரம் செய்தவர்களை கிட்டே இருந்து அபராதம் வாங்கி அவுங்களை 'உள்ளேயும்' தள்ளி இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
22-மே-201911:56:58 IST Report Abuse
Sridhar ஐயோ ஐயோ.. மத்த மீடியாக்கள்தான் வேண்டுமென்றே இந்த விசயத்தை குழப்புகிறது என்றால்? ஏற்கனவே இதே விஷயத்துக்கான மானநஷ்ட வழக்கு உச்ச கோர்ட்டில் இருப்பதால், குஜராத் கோர்ட்டில் இன்னொரு வழக்கு தேவையில்லை என்று வாபஸ் பெற்றுருக்கிறார்கள். இதை எதோ அம்பானி பயந்து போய் கேஸை வாபஸ் வாங்கிவிட்டார் என்பது போலோ அல்லது வெளியே தெரியாத சமரசம் (மன்னிப்பு) செய்யப்பட்டது போலோ பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுகின்றன. சொன்ன பொய்களுக்கு இன்னும் நூறு கேஸ் போட்டு ஊர் ஊரா மன்னிப்பு கேட்டு கெஜ்ரிவால் மாதிரி அலையவிடவேண்டும். சரியான தண்டனை கொடுக்காவிட்டால் தர்மம் செத்துவிடும். எல்லோருக்கும் பொய் சொல்வது சாதாரணம் ஆகிவிடும்.
Rate this:
Share this comment
Milirvan - AKL,நியூ சிலாந்து
23-மே-201913:03:55 IST Report Abuse
Milirvanஓஹோ.. அப்படி போகிறதா கதை..?...
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
22-மே-201911:34:50 IST Report Abuse
சுந்தரம் வழக்கம்போல கருத்துக்கள் இருட்டடிப்பு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X