பொது செய்தி

தமிழ்நாடு

அறிவிக்கப்படாத மின் தடை அவதிக்குள்ளாகும் மக்கள்

Added : மே 22, 2019
Advertisement

காலை, மாலை நேரங்களில் ஏற்படும், மின் தடையால், பொது மக்கள், கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.தமிழக மின் தேவை, தினமும் சராசரியாக, 14 ஆயிரம் மெகா வாட் என்றளவில் உள்ளது.இது, கோடை காலத்தில், வழக்கத்தை விட அதிகரிக்கிறது. அதன்படி, ஏப்ரல், 3ல், மின் தேவை, 16 ஆயிரத்து, 151 மெகா வாட்டாக அதிகரித்தது.கொள்முதல்மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு, மின் வாரியத்திடம், மின் உற்பத்தி மற்றும் மின் கொள்முதல் உள்ளது. இருப்பினும், மின் சாதனங்கள் பழுதால், மின் தடை ஏற்பட்டு வருகிறது.தற்போது, கடும் வெயிலால், தனியார் நிறுவனங்கள் அமைத்துள்ள, சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து, மின் வாரியம், தினமும், 1,600 மெகா வாட்டிற்கு அதிகமாக, மின்சாரம் கொள்முதல் செய்கிறது.காற்றாலை மின் உற்பத்தி சீசன், இம்மாதம் துவங்கியது.இதனால், 8,322 மெகா வாட் திறன் உள்ள காற்றாலைகளில் இருந்து, இம்மாத துவக்கத்தில் இருந்து, தினமும், 2,500 மெகா வாட்டிற்கு மேல் மின்சாரம் கிடைத்தது.குறிப்பாக, அதிகாலை நேரங்களில், காற்றாலைகளில், அதிக மின்சாரம் கிடைக்கிறது.இதனால், மின் தேவையை பூர்த்தி செய்ய சிரமப்படாத மின் வாரியம், நிலக்கரியை மிச்சப்படுத்த, தனக்கு சொந்தமான, 4,320 மெகா வாட் திறன் உள்ள அனல் மின் நிலையங்களில், மின் உற்பத்தி அளவை, 3,000 மெகா வாட் என, குறைத்தது.இந்நிலையில், சில தினங்களாக, காற்றாலை மின்சாரம், 1,000 மெகா வாட்டிற்கு கீழ் குறைந்தது.சிரமம்இதையடுத்து, அனல் மின் நிலையங்களில், மீண்டும் முழு அளவுக்கு, மின் உற்பத்தி செய்யப்படுகிறது.இருப்பினும், காற்றாலைகளில், அதிக மின்சாரம் கிடைக்காததால், மின் தேவையை பூர்த்தி செய்ய, மின் வாரியத்திற்கு, சிரமம் ஏற்பட்டுள்ளது.இதனால் தான், உச்ச மின்தேவை உள்ள, காலை, மாலையில், 30 நிமிடங்கள் வரை, மின் தடை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.இந்த அறிவிக்கப்படாத மின் தடையால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இது குறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர்கூறுகையில், 'மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் கிடைக்கிறது; எந்த பகுதியிலும் திட்டமிட்டு, மின் தடை செய்யப்படவில்லை' என்றார். - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X