பொது செய்தி

தமிழ்நாடு

'டாஸ்மாக்' கடைகள் நாளை விடுமுறை

Added : மே 22, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு, 'டாஸ்மாக்' மதுக் கடைகளுக்கு, நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், 5,200 மது கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்கிறது. இவற்றில், தினமும் சராசரியாக, 80 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகின்றன.இது, வார இறுதி மற்றும் விசேஷ விடுமுறை நாட்களில் அதிகரிக்கிறது.இந்நிலையில், லோக்சபா தேர்தல்

ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு, 'டாஸ்மாக்' மதுக் கடைகளுக்கு, நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், 5,200 மது கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்கிறது. இவற்றில், தினமும் சராசரியாக, 80 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகின்றன.இது, வார இறுதி மற்றும் விசேஷ விடுமுறை நாட்களில் அதிகரிக்கிறது.இந்நிலையில், லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, நாடு முழுவதும், நாளை நடக்கிறது.அதனால், மது கடைகளுக்கு, அன்றைய தினம், விடுமுறை விடப்பட்டுள்ளது.'பார்'கள், ஓட்டல்கள், 'கிளப்'களிலும், மது விற்பனைக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது.தேர்தல் முடிவு காரணமாக, வெள்ளி, சனிக்கிழமைகளில், எந்த இடத்திலாவது வன்முறை ஏற்படும் சூழல் இருந்தால், அங்குள்ள மது கடைகளை, கலெக்டர்கள் அனுமதியுடன், முன்னெச்சரிக்கையாக மூடவும், மாவட்ட மேலாளர்களை, டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-மே-201909:30:01 IST Report Abuse
ஸாயிப்ரியா நாளை அல்லது நாளை மறுநாள் பாட்டில் எடு கொண்டாடு.
Rate this:
Cancel
22-மே-201909:28:20 IST Report Abuse
ஸாயிப்ரியா இன்றே வாங்கி லோட் பண்ணி விடுவர்.
Rate this:
Cancel
Muru - BRISBANE,ஆஸ்திரேலியா
22-மே-201904:45:26 IST Report Abuse
Muru நல்ல குடிமகன் மது அருந்தமாட்டான், நல்ல அரசு மது அருந்த அனுமதிக்காது. கஜானாவை நிரப்ப மது விற்பனை செய்ய தூண்டும் அதிகாரிகள் மாற்றி யோசிக்கவேண்டும். மது திராவிடன் முன்னேற்றத்தை தடுக்கும். திராவிட கழகங்கள் யோசிக்க வேண்டும். மது நாட்டையும் மக்களையும் சீரழிக்கும். எந்த பெரிய மனிதர்களும் மது அருந்த அனுமதிக்க மாடடார்கள். வாழ்க திராவிடர்கள். வேண்டுமெனில் ஒரு கருத்து கணிப்பு செய்யலாம், மது வேணுமா, மது வேண்டாமா என்று ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X