தமிழ்நாடு

திரிசூலநாதருக்கு சொந்தமான சொத்துக்கள்கதி என்ன?  500 சதுரடி ரூ.5.5 லட்சத்திற்கு கூவி விற்பனை

Updated : மே 22, 2019 | Added : மே 22, 2019 | கருத்துகள் (17)
Advertisement
கதி, திரிசூலநாதர், சொத்துக்கள்,  500 சதுரடி, கூவி விற்பனை,  ஆக்கிரமிப்பு, அறநிலையத்துறை, உடந்தை, நீதிமன்றம், எதிர்பார்ப்பு

சென்னை விமான நிலையம் எதிரே உள்ள, திரிசூலம் மலையில், சிவன் கோவிலுக்கு சொந்தமான, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, பட்டா நிலங்கள், தொடர்ந்துஆக்கிரமிப்பாளர்களால் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு, துறை அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை விமான நிலையம் எதிரே உள்ள மலையில் அமைந்துள்ள கிராமம் திரிசூலம். மலை மீது குடி கொண்டிருக்கும், திரிச்சுரமுடையார் எனும் திரிசூலநாதர் கோவிலால், இந்த ஊருக்கு, திரிசூலம் என, பெயர் கிடைத்தது.இக்கோவிலில், மூலவராக திரிசூலநாதரும், உற்சவராக சந்திரசேகரரும், அம்பாளாக திரிபுரசுந்தரியும் அருள் பாலிக்கின்றனர்.


அன்னதானம்


பிரம்மா தனது படைத்தல் பணி சிறப்பாக நடக்க, லிங்க பிரதிஷ்டை செய்து, நான்கு வேதங்களை சுற்றிலும் வைத்து பூஜித்ததாகவும், லிங்கத்தை சுற்றி இருந்த நான்கு வேதங்களும், மலைகளாக மாறியதாகவும் தல வரலாறு கூறுகிறது.மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியை சுரம் என்பர். எனவே, அங்கிருந்த சிவபெருமானை, திருச்சுரமுடைய நாயனார் என அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் திரிசூலநாதரானார்.கோவிலை சுற்றியுள்ள நான்கு மலைகளிலும், கார்த்திகை தீபத்தின் போது, தீபம் ஏற்றும் பழக்கம் உண்டு. இக்கோவிலில், சரபேஸ்வரர் தன் சுயரூபத்துடன், இறகு இல்லாமல் அருள் பாலிக்கிறார்.விநாயகரின் ஆறு அவதாரங்களில், மூலாதார சக்தியான குண்டலினி, நாகவடிவில் இருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்களின் பிரார்த்தனை தலமாகவும், இக்கோவில் விளங்குகிறது.பல நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த, சிறப்பு மிக்க இக்கோவிலுக்கு சொந்தமாக, நுாறு ஏக்கருக்கும் மேற்பட்ட, பட்டா நிலம் உள்ளது.கோவிலை சுற்றி மட்டும், 80 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு, கோவிலின் நித்திய பூஜைகள், திருவிழாக்கள், கோவில் முகப்பில் உள்ள சத்திரத்தில், சிவ பக்தர்களுக்கு, எப்போதும் அன்னதானம் வழங்கப்பபட்டு வந்தது.


நிர்வாக குளறுபடி


அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோவில் வந்த பின், வழக்கமான நிர்வாக குளறுபடி காரணமாக, கோவிலின் பாரம்பரியம் சிதைந்து போனது.அன்னச்சத்திரங்கள் பாராமரிக்கப்படாமல் பாழடைந்தன. கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும், குத்ததைகக்கு விடப்பட்டன.மழை பொய்த்ததால், அந்த நிலங்கள் தரிசாக மாறின. பின், உள்ளூர் அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கி, கோவில் நிலம், கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளை போயின.ஒன்பது ஆண்டுகளில் மட்டும், இக்கோவிலுக்கு சொந்தமான பட்டா நிலம், 70 ஏக்கருக்கு மேல், கபளீகரம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து, ஆன்மிக நல விரும்பிகள் கூறியதாவது:காஞ்சி மாவட்டம், ஆலந்துார் வட்டம், திரிசூலம் வருவாய் கிராமத்தில், சர்வே எண், 29 முதல், 97 வரை, 60 ஏக்கருக்கும் மேற்பட்ட நன்செய், 20 ஏக்கருக்கும் மேற்பட்ட புன்செய் நிலங்கள், திரிசூலநாதர் கோவிலுக்கு சொந்தமானவை. அழிந்துவிடும்இந்த நிலங்கள், கோவிலைச் சுற்றியே உள்ளன. இவை அனைத்துக்கும், திரிசூலநாதர் பெயரிலேயே பட்டா உள்ளது.இதில், 70க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள், உள்ளூர் அரசியல்வாதிகள், ஆக்கிரமிப்பாளர்களால், கூறு போட்டு விற்பனை செய்யப்பட்டு உள்ளன.கோவில் பட்டா நிலத்தை, 100 ரூபாய் பத்திரத்தில் எழுதி விற்பனை செய்துள்ளனர். இதற்கு, கோவில் நிர்வாகம், ஊராட்சி, மின்வாரியம் ஆகியவை உடந்தையாக இருந்து வருகின்றன.ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள இடத்தில், சகல வசதிகளுடன், அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை, இனியும் கண்மூடிக் கொண்டுஇருந்தால், சிவன் சொத்து அழிந்துவிடும். அதனை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


500 சதுரடி ரூ.5.5 லட்சம்!

திரிசூலநாதர் கோவில் நிலத்தை, பல குழுவாக ஆக்கிரமித்து, விற்பனை செய்து வருகின்றனர். ஆக்கிரமித்த இடத்திற்கு, முதலில் ஊராட்சிஉதவியுடன், தார் சாலை அமைக்கப்படும். மின்வாரியம் உதவியுடன், தெருவிளக்குகள் அமைக்கப்படும். அடுத்தகட்டமாக, 500 சதுர அடியாக மனைகள் பிரிக்கப்படுகின்றன.ஒரு மனையின் விலை, 5.5 லட்சம் ரூபாய். இதில், 50,000 ரூபாய், இடத்தினை பாதுகாக்கும் ரவுடிகளுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் ஆக்கிரமிப்பாளர், ஊராட்சி, மின்வாரியம் என, பகிர்ந்துகொள்வதாக, தெரியவந்துள்ளது.


ஒரே நாளில் மின் இணைப்பு!


வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டி, வீட்டு பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களுடன், முறைப்படி பதிவு செய்து, வழக்கமான, 'மாமுல்' கொடுத்தாலும், மின் இணைப்பு கிடைக்க, மாதக்கணக்கில் ஆகும்.ஆனால், திரிசூலநாதர் கோவில் பட்டா நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு, வீடு கட்டாவிட்டாலும், ஒரே நாளில், மீட்டருடன் கூடிய மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.இதற்கான கட்டணம், 40 ஆயிரம் ரூபாய். எட்டு ஆண்டுகளில், 1,000க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள், இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன.மின் துறையின் நேர்மையான அதிகாரிகளை கொண்டு, அதிரடி ஆய்வு மேற்கொண்டால், கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் கைமாறிஉள்ளது, வெட்ட வெளிச்சத்திற்கு வரும்.


நீதிமன்றம் தலையிட வேண்டும்!


திரிசூலநாதர் கோவில் நில ஆக்கிரமிப்பு குறித்து, ஆன்மிக நல விரும்பிகள், பல முறை, அறநிலையத்துறையில் புகார் செய்தும், நடவடிக்கை இல்லை. சமீபத்தில், கோவில் நிலம் குறித்த கணக்கெடுப்பில் கூட, போலி கணக்கு காட்டப்பட்டதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, கோவில் சொத்துக்களை காப்பாற்ற, நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, சிவன் சொத்தை மீட்க முடியும்.


தண்டனை கிடைக்குமா?


கோவில் நிலம், கூறுபோட்டு விற்பனை செய்யப்பட்டதில், அறநிலையத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கு பங்கு உண்டு. ஆக்கிரமிப்பிற்கு உட்பட்ட காலகட்டங்களில், அறநிலையத்துறை, ஊராட்சி நிர்வாகம், மின்வாரியம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளில் பணியாற்றிய அலுவலர்கள், அதிகாரிகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என, சிவ பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- -நமது நிருபர்- -

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
22-மே-201918:02:41 IST Report Abuse
K. V. Ramani Rockfort கோவில் சொத்துக்களை காப்பாற்ற, நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, சிவன் சொத்தை மீட்க முடியும்.
Rate this:
Share this comment
Cancel
Prasanna -  ( Posted via: Dinamalar Android App )
22-மே-201911:31:38 IST Report Abuse
Prasanna
Rate this:
Share this comment
Cancel
Prasanna -  ( Posted via: Dinamalar Android App )
22-மே-201911:31:47 IST Report Abuse
Prasanna
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X