பொது செய்தி

தமிழ்நாடு

தாழ்வான மண்ரோடு உயரமான தார்ரோடு

Added : மே 22, 2019
Advertisement

வத்திராயிருப்பு, : வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் குன்னுாரிலிருந்து கிருஷ்ணன்கோவில் வழித்தடத்தில் தார்ரோடு உயரமாகவும், மண்ரோடு தாழ்வாகவும் இருப்பதால் வாகனஓட்டிகள் தவறிவிழுகின்றனர்.

நாளுக்குநாள் குடியிருப்புகள் அதிகரித்து டூவீலர், ஆட்டோக்கள், டிராக்டர்கள், பஸ்கள், பள்ளி வாகனங்கள் அதிகளவில் இவ்வழித்தடத்தில் பயணிக்கிறது. இந்நிலையில் கிருஷ்ணன் கோவிலிலிருந்து குன்னுார் செல்லும் ரோட்டில் போக்குவரத்து நகரிலுள்ள பல்வேறு தெருக்களின் ரோடுகள் இந்த ரோட்டில் இணைகின்றன. ஆனால் இங்கு மண்ரோடு தாழ்வாகவும், தார்ரோடு உயரமாகவும் இருப்பதால் எதிரே கனரக வாகனங்கள் வரும்போது டூவீலர் ஓட்டுபவர்கள் தவறி விழுகின்றனர். இதில் சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

கிருஷ்ணன்கோயிலிலிருந்து குன்னுார் வரை ரோட்டில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அகலபடுத்தி விபத்தில்லா பயணத்திற்கு சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X