பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடைகளுக்கு 'வெப்ப அயற்சி': தடுக்க ஆலோசனை

Added : மே 22, 2019
Advertisement

விருதுநகர் : '' விருதுநகரில் கோடை காலத்தில் கால்நடைகளில் ஏற்படும்'வெப்ப அயற்சியை' கால்நடை தொட்டிகள் அமைத்து தண்ணீர் வழங்குவதன் மூலம் தடுக்கலாம்,'' என,இணை இயக்குனர் அருணாச்சலக்கனி தெரிவித்தார்.

அவரது செய்தி குறிப்பு: விருதுநகர் மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. கோடை காலத்தில் கால்நடைகளுக்கு வெப்ப அயற்சி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நிழலில் தஞ்சம் அடைவது, அதிகமான தண்ணீர் அருந்துவது, பசியின்மை, அதிகமான உமிழ்நீர் வடிவது, அதிக உடல் வெப்ப நிலையால் வாய் திறந்த நிலையில் சுவாசிப்பது, நடுக்கம் ஏற்படுவது, இறுதியில் கால்நடைகள் தள்ளாடி கீழே விழுந்து இறந்து போவது ஆகியவை வெப்ப அயற்சிக்கான அறிகுறிகள். இதை தடுக்க எப்போதும் தண்ணீர் கிடைக்கும் வகையில் கால்நடை தொட்டி அமைத்து சுத்தமான குடிநீரை வழங்க வேண்டும்.

கலப்பு தீவனத்தை தண்ணீரில் துாவும் போது மாடுகளின் தண்ணீர் குடிக்கும் அளவு அதிகரிக்கும். அதிகப்படியான உலர், நார் சத்துக்களையும், குறைவாக செரிக்க கூடிய தீவனங்களையும் உட்கொள்கின்றன. இதனால் நா வறண்டு கால்நடைகளுக்கு அதிகப்படியான தாகம் எடுக்கும். அப்போது உப்புக்கட்டிகளை கால்நடை கொட்டகைகளில் கட்டி தொங்க விட வேண்டும். அக்கட்டியை கால்நடைகள் நாவினால் சுவைக்கும் போது கால்நடைகளில் தண்ணீர் அருந்தும் தன்மை அதிகரிக்கும்.

உப்பு சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கப்படும். தண்ணீரை முறையாக பருகினாலே வெப்ப அயற்சி நோய் ஏற்பட வாய்ப்பில்லை,என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X