பொது செய்தி

தமிழ்நாடு

குளிர்பானங்கள் பறிமுதல்

Added : மே 22, 2019
Advertisement

தி.நகர்:குளிர்பான கடைகளில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், 350 தரமற்ற குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையில், கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், குளிர்பான கடைகளில், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதை பயன்படுத்தி, சில வியாபாரிகள், தரமற்ற குளிர்பானங்களை விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது.இதையடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், தி.நகர், உஸ்மான் சாலை, ரங்கராஜன் சாலை, நாகேஸ்வரா சாலை உள்ளிட்ட பகுதி கடைகளில், நேற்று சோதனையிட்டனர்.
இதில், 17 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில், 350 தரமற்ற குளிர்பான பாட்டில்கள் மற்றும், குளிர்பானம் தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருட்கள், தரமற்ற ஐஸ் கட்டிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.தரமற்ற குளிர்பானங்களை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X