பொது செய்தி

தமிழ்நாடு

சிறுமி திருமணம் நிறுத்தம்

Added : மே 22, 2019
Advertisement

விருத்தாசலம்,விருத்தாசலத்தில், 16 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை, 'சைல்டுலைன்' அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் புதுக்குப்பத்தைச் சேர்ந்தவர், குமார், 28; செராமிக் கம்பெனி ஊழியர்.இவருக்கும், விருத்தாசலத்தைச் சேர்ந்த, 10ம் வகுப்பு முடித்த, 16 வயது சிறுமிக்கும், விருத்தகிரீஸ்வரர் கோவிலில், இன்று திருமணம் நடக்க இருந்தது.தகவலறிந்த கடலுார், சைல்டுலைன் அலுவலர், பார்த்திபராஜா தலைமையில், சமூக நல அலுவலர்கள், விஜயா மற்றும் போலீசார் விசாரித்தனர். இதில், சிறுமிக்கு, 18 வயது முடியாதது தெரிந்தது. '18 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்வது, சட்டப்படி குற்றம்; மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பெற்றோரை எச்சரித்து, சிறுமியை, கடலுார் காப்பகத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X