பொது செய்தி

தமிழ்நாடு

கடலூர் கலெக்டருக்கு ஆணையம், 'நோட்டீஸ்'

Added : மே 22, 2019
Advertisement

சென்னை, ஊரை விட்டு, குடும்பத்தினரை ஒதுக்கி வைத்தது தொடர்பாக, விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய, கடலுார் கலெக்டருக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கடலுார் மாவட்டம், திட்டக்குடி, பாசார் கிராமத்தைச்சேர்ந்தவர், மருதமுத்து, 60. ஊர் முக்கியஸ்தர்கள், சில ஆண்டுகளுக்கு முன், கிராம மக்களிடம் பணம் வசூலித்து, கோவில் திருவிழா நடத்தினர். அது குறித்து கணக்கு கேட்டதால், மருதமுத்துவின் குடும்பத்தை, பொது விழாக்களில் சேர்க்காமல் தள்ளி வைத்துள்ளனர்.இதுகுறித்து, வேப்பூர் காவல் நிலையத்தில், புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், மருதமுத்து மற்றும் அவரது குடும்பத்தைச்சேர்ந்த ஆறு பேர், டி.எஸ்.பி., அலுவலகம் முன், தற்கொலைக்கு முயன்றனர்.இந்த சம்பவம் குறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது.ஆணைய நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ் பிறப்பித்த உத்தரவில், 'இந்த சம்பவத்தில் நடந்துள்ள மனித உரிமைமீறல் தொடர்பாக, கடலுார் மாவட்ட கலெக்டர், எஸ்.பி., ஆகியோர் விசாரணை நடத்தி, நான்கு வாரத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என,கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X