பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் கல்லூரிகளுக்கு சென்னை பல்கலை அறிவுரை

Added : மே 22, 2019 | கருத்துகள் (3)
Advertisement

சென்னை, 'தனியார் கல்லுாரிகளில், தகுதி வாய்ந்த பேராசிரியர்களையே நியமிக்க வேண்டும்' என, சென்னை பல்கலை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள தனியார் கல்லுாரிகளில், பெரும்பாலான உதவி மற்றும் இணை பேராசிரியர்களுக்கு, போதுமான கல்வி தகுதி இல்லை என்ற, புகார் எழுந்துள்ளது.பல கல்லுாரிகளில், 50 சதவீத பேராசிரியர்கள், பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., வகுத்த விதிகளின்படி, கல்வி தகுதி பெறவில்லை என, கூறப்படுகிறது.இந்நிலையில், சென்னை பல்கலைக்கு உட்பட்ட தனியார் கல்லுாரிகளில், மூன்றில் இரண்டு பங்கு ஆசிரியர்கள், யு.ஜி.சி.,யின் கல்வி தகுதியான, பிஎச்.டி., மற்றும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என, தெரிய வந்துள்ளது.இதையடுத்து, சென்னை பல்கலை சார்பில், அனைத்து கல்லுாரிகளுக்கும், சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதில், 'உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அனைத்து கல்லுாரிகளிலும், யு.ஜி.சி., வகுத்த விதிகளின்படி, சரியான கல்வி தகுதி உள்ள பேராசிரியர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும்.'கல்லுாரி நிர்வாகங்கள், இதுகுறித்து ஆய்வு செய்து, அந்தந்த பாட பிரிவுக்கு பொருத்தமான, கல்வி தகுதி உள்ள பேராசிரியர்களை நியமிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-மே-201916:54:38 IST Report Abuse
ஆப்பு தகுதியானவங்க்களுக்கு சீட் அப்போ குடுத்திருந்தா இப்போ தகுதியான ஆசிரியர்கள் கிடைப்பாங்க. சமூகநீதி சீட்களுக்கு சமூகநீதி ஆசிரியர்களே போறும். சம்பளம் டாஸ்மாக்கிலிருந்து வந்துரும். அம்மா ஆட்சில்லே நடக்குது.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
22-மே-201909:45:25 IST Report Abuse
Bhaskaran இவிங்க கொடுக்கும் சம்பளத்துக்கு அமெரிக்காவில் முனைவர்பட்டம் படிச்சவங்களா வருவாங்க
Rate this:
Share this comment
Cancel
ganesh - madurai,இந்தியா
22-மே-201906:42:59 IST Report Abuse
ganesh முதல்ல ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷனை மாற்றுங்க எல்லா பிரைவேட் காலேஜ்லயும் M .Sc படித்தவர்களை வைத்து பாடம் நடத்துகிறார்கள் இதை மாற்றவேண்டியது துணைவேந்தர்கள் பொறுப்பு இதை மறந்து கல்லூரி நிர்வாகத்திடம் கெஞ்சி கேட்டு கொண்டுருக்கிறார்கள் இது என்ன காலக்கொடுமையோ ....இல்லை இவர்களும் எதையாவது எதிர் பார்க்கிறாங்கல என்னோவோ ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X