வனத்துறை மிரட்டல் கலெக்டருக்கு உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வனத்துறை மிரட்டல் கலெக்டருக்கு உத்தரவு

Added : மே 22, 2019

சென்னை, மலைவாழ் மக்களை காலி செய்ய வலியுறுத்துவது தொடர்பாக, தர்மபுரி மாவட்ட கலெக்டர் பதிலளிக்க, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தர்மபுரி மாவட்டம், பென்னாகரம், பண்ணப்படி வனப்பகுதியில், இருளர் இன மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். அந்த மக்களை, அப்பகுதியில் இருந்து காலி செய்யும்படி, வனத் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.மேலும், காலி செய்யவில்லை என்றால், சுட்டு கொல்வதாகவும் மிரட்டியது குறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது.ஆணைய நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ், ''இந்த சம்பவம் குறித்து, தர்மபுரி கலெக்டர், தமிழக தலைமை வனப்பாதுகாவலர் ஆகியோர், விசாரணை நடத்தி, இரண்டுவாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,'' என, உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X