திருமண மண்டபங்கள் தான் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருமண மண்டபங்கள் தான் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம்

Added : மே 22, 2019
Share
சென்னையில், வாகனம் நிறுத்த வசதி இல்லாத திருமண மண்ட பங்களால், அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக, நெடுஞ்சாலைத் துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.சென்னையில், 200 கி.மீ.,க்கும் மேற்பட்ட சாலைகள், மாநில நெடுஞ்சாலைத் துறையின்பராமரிப்பில் உள்ளன.இதில், அண்ணாசாலை, ஜி.என்.டி., சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, உள்வட்டச்சாலை, வேளச்சேரி நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மவுன்ட் -

சென்னையில், வாகனம் நிறுத்த வசதி இல்லாத திருமண மண்ட பங்களால், அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக, நெடுஞ்சாலைத் துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.சென்னையில், 200 கி.மீ.,க்கும் மேற்பட்ட சாலைகள், மாநில நெடுஞ்சாலைத் துறையின்பராமரிப்பில் உள்ளன.
இதில், அண்ணாசாலை, ஜி.என்.டி., சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, உள்வட்டச்சாலை, வேளச்சேரி நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மவுன்ட் - பூந்த மல்லி நெடுஞ்சாலை உள்ளிட்டவை அடக்கம்.சென்னையில், நாளுக்கு நாள் வாகனங்களின்எண்ணிக்கை, கணிசமாக அதிகரித்து வருகிறது. இது மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்னைக்கு வந்து செல்கின்றன.வரும் காலத்திற்கு ஏற்றபடி, இச்சாலைகளை மாற்றி அமைக்க வேண்டிய அவசியம், நெடுஞ்சாலைத் துறைக்கு ஏற்பட்டுள்ளது.இது குறித்து, நெடுஞ்சாலைத் துறையின், பெருநகரம் பிரிவு வாயிலாக, ஒரு மாதம் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இதில், சாலையோர ஆக்கிரமிப்பு, வாகன நிறுத்த வசதி இல்லாத திருமண மண்டபங்கள் தான், போக்குவரத்து நெரிசலுக்கு பிரதான காரணம் என, தெரிய வந்துள்ளது.இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னையில், பிரதான சாலைகளை ஒட்டி, வர்த்தக வளாகங்கள், திருமண மண்டபங்கள், உணவு விடுதிகள் உள்ளிட்டவை, அதிகளவில் கட்டப்பட்டு வருகின்றன.ஆனால், வாகன வசதி இல்லாமல், ஜி.என்.டி., சாலை, உள்வட்டச்சாலை, மவுன்ட் - பூந்தமல்லி உள்ளிட்ட சாலைகளில், அதிகளவில் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.இங்கு நிகழ்ச்சிகளுக்கு வருபவர்கள், வாகனங்களை, சாலையிலேயே நிறுத்தி விடுகின்றனர்.இது, விபத்துகளை ஏற்படுத்துவதுடன், போக்குவரத்து போலீசாருக்கும், தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன.வாகனம் நிறுத்த வசதி இல்லாத, திருமண மண்ட பங்களை முறைப்படுத்தினாலே, போக்குவரத்து நெரிசலை, கணிசமாக குறைக்க முடியும்.இது குறித்து, சி.எம்.டி.ஏ., மற்றும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க, அரசுக்கு பரிந்துரைக்க உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார். - நமது நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X