பொது செய்தி

இந்தியா

ஐஸ்வர்யா ராய் பற்றி சர்ச்சை, 'டுவிட்' மன்னிப்பு கோரினார் விவேக் ஓபராய்

Updated : மே 22, 2019 | Added : மே 22, 2019 | கருத்துகள் (5)
Advertisement
 ஐஸ்வர்யா ராய் பற்றி சர்ச்சை, 'டுவிட்' மன்னிப்பு கோரினார் விவேக் ஓபராய்

மும்பை:நடிகை ஐஸ்வர்யா ராயை, தேர்தல் கருத்து கணிப்புகளுடன் தொடர்புபடுத்தி, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், கருத்து வெளியிட்டதற்காக,நடிகர் விவேக் ஓபராய் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கருத்து கணிப்பு
ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய், 42. தமிழில், விவேகம் என்ற படத்தில் நடித்து உள்ளார். மேலும், 24ம் தேதி வெளியாக உள்ள, பி.எம்., நரேந்திர மோடி என்ற படத்தில், பிரதமர் மோடியாக, விவேக் ஓபராய்நடித்துள்ளார்.லோக்சபாவுக்கு, ஏழு கட்ட தேர்தல், கடந்த, 19ல் நடந்து முடிந்தது. இதைஅடுத்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின.இந்த கருத்து கணிப்புகளை, நடிகை ஐஸ்வர்யா ராயுடன் தொடர்புபடுத்தி, டுவிட்டரில், 'மீம்ஸ்' ஒன்றை விவேக் ஓபராய் வெளியிட்டார்.நடிகர் சல்மானுடன் ஐஸ்வர்யா ராய் இணைந்து எடுத்த படம், தன்னுடன் இணைந்து எடுத்த படம், கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யாவுடன் எடுத்த படம் ஆகியவற்றை இணைத்து, விவேக் ஓபராய்பதிவிட்டிருந்தார்.முதல் படத்துக்கு கருத்து கணிப்பு, இரண்டாவது படத்துக்கு வாக்கு கணிப்பு, மூன்றாவது படத்துக்கு தேர்தல் முடிவு என, குறிப்பிட்டிருந்தார்.ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் வகையில், இந்த படங்கள் உள்ளதாக, பலரும், ஓபராய்க்கு கண்டனம் தெரிவித்தனர்.இதற்கு கண்டனம் தெரிவித்த தேசிய மகளிர் ஆணையம், இது பற்றி விளக்கம் கேட்டு, ஓபராய்க்கு, 'நோட்டீஸ்' அனுப்பியது.இந்நிலையில், டுவிட்டரில் தெரிவித்த கருத்துக்காக மன்னிப்பு கேட்டு, விவேக் ஓபராய் கூறியதாவது:




மீம்ஸ்
நான் எப்போதும் ஒரு பெண்ணை தவறாகவோ, மற்றவர் மனம் புண்படுவது போல இருந்தால், அதை செய்ய மாட்டேன். ஒரு சில நேரங்களில் நாம் முதலில் பார்க்கும் பார்வை வேறுமாதிரியாகவும், பின்னர் வேறுமாதிரியாக தோன்றலாம்.அதே போல், ஐஸ்வர்யாராய் மீம்ஸைப் பார்த்து, நான் முதலில் சிரித்துவிட்டேன். தற்போது அதை நீக்கி, மன்னிப்பு கோருகிறேன்.இவ்வாறு, விவேக் ஓபராய் கூறியுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
22-மே-201912:06:01 IST Report Abuse
Sridhar ஆச்சர்யம் என்னன்னா இவுரு வேற ஒருத்தர் (சல்மான் கான்) அனுப்பிய டீவீட்டை ரிடிவீட் தான் செய்துள்ளார். ஸ்ம்ரிதி இரானி லேர்ந்து எவ்வளவோ பேர இவனுங்க படுகேவலமா மீம்ஸ் போட்டபோது ஒரு பய கேக்கல. இப்போ எங்கிருந்தோ புசுபுசுன்னு ரெண்டு பைசா பிரயோசனம் இல்லாத மேட்டருக்கு வரிஞ்சு கட்டிக்கிட்டு வரானுங்க..
Rate this:
Share this comment
Cancel
tamilan - கோயம்புத்தூர்,இந்தியா
22-மே-201907:53:08 IST Report Abuse
tamilan அப்போ இரண்டு மனைவிகளை கொண்டுள்ள ஆண்களை பற்றி மீம்ஸ் போடலாமே
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-மே-201906:56:47 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற கொழுப்பு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X