பாக். படகில் ரூ.500 கோடி போதை பொருள் பறிமுதல்

Updated : மே 22, 2019 | Added : மே 22, 2019 | கருத்துகள் (5)
Advertisement

ஆமதாபாத்,: குஜராத் கடற்பகுதியில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த படகிலிருந்து, 500 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை, கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.






குஜராத்தில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த, கடலோர காவல் படையினருக்கு, போதை பொருட்கள், கடல் வழியாக கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். சர்வதேச கடல் எல்லை அருகே, நேற்று(மே 21), பாகிஸ்தான் மீன்பிடி படகு, சந்தேகத்துக்குரிய வகையில் நின்றது, கண்டுபிடிக்கப்பட்டது. கடலோர காவல் படையினர், அதிவிரைவு படகுகளில், பாக்., படகை துரத்திச் சென்றனர்.





அப்போது, அதில் இருந்தவர்கள், சில பாக்கெட்டுகளை கடலுக்குள் வீசினர். ஆனாலும், அதிகாரிகள், கடலுக்குள் குதித்து, அந்த பாக்கெட்டுகளை கைப்பற்றினர். அவற்றில், போதை பொருள் இருப்பது, கண்டுபிடிக்கப்பட்டது. 'அவற்றின் சர்வதேச மதிப்பு, 500 கோடி ரூபாய்' என, அதிகாரிகள் தெரிவித்தனர். பாக்., படகில் இருந்தவர்களை பிடித்து, கடலோர காவல் படையினர் விசாரித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
22-மே-201905:21:36 IST Report Abuse
வல்வில் ஓரி பாக் படகுன்னாலே கைது பண்ண வேண்டியது தானே..அவன் கிட்ட போதைப்பொருள் இல்லாம அத்தரும் ஜவ்வாதுமா. இருக்கும்?.. ரெம்பா காமிடி யா இரிக்கி
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
22-மே-201904:06:28 IST Report Abuse
blocked user நாட்டை விற்பதற்குப்பதிலாக போதைப்பொருள்களை விற்று வாழ்க்கை நடத்துகிறார்கள்.. இந்தப்பன்றிகளை கண்டதுண்டமாக வெட்டிப்போடவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-மே-201903:38:41 IST Report Abuse
J.V. Iyer பாகிஸ்தானின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டீர்கள். இவர்களது முக்கிய ஏற்றுமதியே இந்த போதைப்பொருள்களும், துப்பாக்கிகளும், அங்கு அச்சடிக்கப்பட்ட போலி இந்தியா ரூபாய்களும்தான். இவைகளை இந்தியாவில் "வாங்கி விற்பனை" செய்ய நிறைய தேசத்துரோகிகள் இங்கு உள்ளனர் என்பது தெரிந்ததே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X