பொது செய்தி

இந்தியா

மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள்

Added : மே 22, 2019 | கருத்துகள் (25)
Advertisement

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் இஸ்லாமிய மதக் கொள்கைகளை போதிக்கும், மதரசா பள்ளியில் படித்த மூன்று ஹிந்து மாணவிகள், தேர்வில் 90 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.







மேற்கு வங்க மாநிலம் கிழக்கு புர்த்வான் பகுதியில், கெட்டுகிராமில் உள்ள அகோர்தங்கா மதரசா பள்ளியில் படிக்கும் மாணவர்களில், 60 சதவீதத்தினர் ஹிந்துக்கள். அங்கு சுமார் 900 ஹிந்து மாணவர்கள், இஸ்லாமிய மதக் கொள்கைகளை பயின்றனர். அப்பள்ளியில் தேர்வு எழுதிய 62 மாணவர்களில் 45 பேர் பெண்கள்.
மேற்குவங்கத்தில் கடந்த வாரம் மதரசா தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின. இத்தேர்வில், அகோர்தங்கா மதரசாவில் படிக்கும் 3 ஹிந்து மாணவிகள் 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளனர்.






மதரசாவில் மத்யமிக் பிரிவில் படித்து, 800 மதிப்பெண்களுக்கு நடந்த தேர்வில், பியூபியா சகா, சதி மோதக் மற்றும் அர்பிதா சகா என்ற மாணவிகள் முறையே 730 (91.25%), 730 மற்றும் 739 (92.38%) மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளனர். குறிப்பாக அடிப்படை முஸ்லிம்களின் வரலாற்று பாடத்தில் இவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இம்மாணவிகள் முறையே 95, 92 மற்றும் 93 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவிகளின் வெற்றியை கிராமத்தினர் கொண்டாடி வருகின்றனர்.
முஸ்லீம்கள் அல்லாத மாணவர்கள் மதரசாக்களில் படிப்பது, மேற்குவங்கத்தில் அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில் மதரசாக்களில் பயிலும் மாணவர்களில் 12 சதவீதத்தினர் முஸ்லீம் அல்லாதவர்கள். இது கடந்த ஆண்டை விட 4 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - bengalooru,இந்தியா
23-மே-201907:22:33 IST Report Abuse
 nicolethomson ஓஹோ செக்யூலர் காரங்க எதுவும் சொல்லமாட்டாங்க
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
22-மே-201915:21:07 IST Report Abuse
ganapati sb சர்ச்சில் கிறிஸ்தவ போதனைகளும் மசூதியில் இஸ்லாமிய போதனைகளும் சொல்லித்தரப்படுகிறது ஏன் இந்து கோயில்களில் இந்து போதனை வகுப்புகள் நடத்தப்படுவதில்லை
Rate this:
Share this comment
Cancel
Being Justice - chennai ,இந்தியா
22-மே-201911:48:09 IST Report Abuse
Being Justice பிற மத போதனைகளை படிக்காவிட்டாலும் உங்களின் மத போதனைகளையாவது சிறப்பாக படியுங்கள். ஒவ்வொரு மதமும் பிற மதத்தை மதிக்கவே கற்று கொடுக்கின்றது. தன்னோடதையும் படிக்காமல் அடுத்தவர்களுடையதை படிப்பதையும் கெடுப்பதற்காகவே ஒருசில அரை வேக்காடுகள் திரிகின்றன. மதங்களை படியுங்கள். மேன்மை பெறுவீர்கள். பிற மதத்தையும் மதிக்க கற்றுக்கொள்வீர்கள். மத போதனைகளை பின்பற்றுங்கள் மாமனிதர்களாவீர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X