கேதார்நாத் குகையில் தங்க உங்களால் முடியுமா?: உத்தரகண்ட் முதல்வர்

Updated : மே 22, 2019 | Added : மே 22, 2019 | கருத்துகள் (59)
Share
Advertisement

டேராடூன்: 'எதிர்கட்சிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தாலும், கேதார்நாத் குகையில் தங்க அவர்களால் முடியுமா?' என உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.latest tamil newsலோக்சபா தேர்தலில் கடைசி கட்ட ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும், பிரதமர் மோடி கேதார்நாத் சென்று, பழமையான சிவன் கோவிலில் தரிசனம் செய்தார். காவி உடையணிந்து, அங்குள்ள குகையில், 17 மணி நேரம் தியானம் செய்தார். குகைக்கு வாடகையாக ஒரு நாளைக்கு, 990 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இங்கு, மூன்று வேளை உணவு, படுக்கை, உதவியாளர் உள்ளிட்ட வசதி செய்து தரப்படும். ஆனால் வசதிகள் அனைத்தையும் தவிர்த்து, குகையில் மோடி தியானம் செய்தார்.


latest tamil newsஇந்நிலையில் குகையில் அவர் தியானம் செய்ததை எதிர்கட்சிகள் விமர்சனம் செய்தன. இதனை கண்டிக்கும் விதமாக உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கூறியதாவது: பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி 300க்கும் அதிகமான இடங்களை கைபற்றும். பிரதமர் மோடி, கேதார்நாத் குகையில் தியானம் செய்ததை, சிலர் கிண்டலடிக்கின்றனர். அவர்களுக்கு சவால் விடுகிறேன். தேவையான வசதிகளை செய்து தருகிறோம். உங்களால், ஒரு நாள், அந்த குகையில் தங்கி, தியானம் செய்ய முடியுமா? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

Advertisement
வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Snake Babu - Salem,இந்தியா
22-மே-201916:13:00 IST Report Abuse
Snake Babu அவர்களால் முடியாமல் போகலாம் ....ஆனால் இந்த மாதிரி கேள்வி கேட்க கூடாது ....17 மணி நேரம் என்ன ??......காற்றில் மிதக்கலாம் ....தண்ணீரில் நடக்கலாம் ....உடல் ஜீவ சமாதி ஆகி உயிர் வாழும் சித்தர்கள் உண்டு ....திருமுலர் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார் .... அருமையா சொன்னிங்க svs - yaadum oore,இந்தியா அவர்களே. ஒரு பிரதமரா நாட்டுக்கு என்ன பண்ணணுமோ தேர்தலிலும் ஒண்ணும் கூறவில்லை இப்போதும் ஒன்னும் கூறவில்லை, அதிலும் இன்னும் கொடுமை தவறு என்று நாம் கூறியதை தேர்தல் முடிவு வருவதற்குள்ளே அதையெல்லாம் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று முழுதாக மறைக்க பார்க்கிறார்கள். தியானம் இத்தனை மணிநேரம் என்பதெல்லாம் வேறு, நாட்டுக்கு வேண்டியது வேறு. யதார்த்தத்திற்கு வாருங்கள். எப்போதும் மாயையிலேயே இருக்காதீர்கள். தியானம் பற்றி பேசவேண்டும்மெற்றால் அது தனி துறை, மணிக்கணக்கில் பேசலாம். வாங்க எங்க 3 நாள் தியானம் 5 நாள் தியானம் என மாதக்கணக்கில் தியானம் செய்பவர்கள் இருக்கிறார்கள். இதை போய் பெருமையாக பேசுவது அதுவும் விளமபரமாக பேசுவது என்பது தவறு. இதற்கு பேர் வியாபாரம். அரசியலுக்கு இந்த விளம்பரம் தேவை. என போக்கு அதகரித்துவருவது தவிர்க்கப்பட வேண்டியது. தற்போது 21 நாள் முடித்து தியானம் செய்து வந்தவர் இருக்கிறார். இத்தனைக்கும் 7 நாள் கழித்து நீர் அருந்துவதையும் விட்டுவிட்டார். எந்த துணையும் இன்றி. இதை தனியாக பேசலாம். நிறைய சுவாரிஸ்யமாக இருக்கும் நன்றி வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
krish - chennai,இந்தியா
25-மே-201908:04:33 IST Report Abuse
krishஇவரது விளம்பரம் என்றால், அவரதும் விளம்பரம் தானே//. யதார்த்தத்துக்கு வருவோம். abridged version உண்ணாநோன்பு மூலம் ஈழத்து நன்மைக்கு சாதித்தது என்ன?...... கொடும் உயிர் பலியும், மக்களின் மீளா, சொல்லொணா துயரம் மட்டும் தானே.......
Rate this:
Share this comment
Cancel
Naren - Chennai,இந்தியா
22-மே-201914:30:38 IST Report Abuse
Naren பிரதமரானால் எவர்தான் தங்க முடியாது... தேவையற்ற விளம்பர அளப்பறைகள்...
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
22-மே-201912:54:43 IST Report Abuse
Darmavan தெய்வ நம்பிக்கை உள்ளவன் தவறு செய்ய மாட்டான் என்பது தர்மம்
Rate this:
Share this comment
Divahar - tirunelveli,இந்தியா
22-மே-201914:37:35 IST Report Abuse
Divaharஇது மூட நம்பிக்கை. அரசியலில் தவறு செய்துவிட்டு உண்டியலில் ஒரு பங்கு போட்டு விடுகிறார்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X