கேதார்நாத் குகையில் தங்க உங்களால் முடியுமா?: உத்தரகண்ட் முதல்வர்| Dinamalar

கேதார்நாத் குகையில் தங்க உங்களால் முடியுமா?: உத்தரகண்ட் முதல்வர்

Updated : மே 22, 2019 | Added : மே 22, 2019 | கருத்துகள் (59)
Share
டேராடூன்: 'எதிர்கட்சிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தாலும், கேதார்நாத் குகையில் தங்க அவர்களால் முடியுமா?' என உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.லோக்சபா தேர்தலில் கடைசி கட்ட ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும், பிரதமர் மோடி கேதார்நாத் சென்று, பழமையான சிவன் கோவிலில் தரிசனம் செய்தார். காவி உடையணிந்து, அங்குள்ள குகையில், 17 மணி நேரம்

டேராடூன்: 'எதிர்கட்சிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தாலும், கேதார்நாத் குகையில் தங்க அவர்களால் முடியுமா?' என உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.



latest tamil news



லோக்சபா தேர்தலில் கடைசி கட்ட ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும், பிரதமர் மோடி கேதார்நாத் சென்று, பழமையான சிவன் கோவிலில் தரிசனம் செய்தார். காவி உடையணிந்து, அங்குள்ள குகையில், 17 மணி நேரம் தியானம் செய்தார். குகைக்கு வாடகையாக ஒரு நாளைக்கு, 990 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இங்கு, மூன்று வேளை உணவு, படுக்கை, உதவியாளர் உள்ளிட்ட வசதி செய்து தரப்படும். ஆனால் வசதிகள் அனைத்தையும் தவிர்த்து, குகையில் மோடி தியானம் செய்தார்.


latest tamil news



இந்நிலையில் குகையில் அவர் தியானம் செய்ததை எதிர்கட்சிகள் விமர்சனம் செய்தன. இதனை கண்டிக்கும் விதமாக உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கூறியதாவது: பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி 300க்கும் அதிகமான இடங்களை கைபற்றும். பிரதமர் மோடி, கேதார்நாத் குகையில் தியானம் செய்ததை, சிலர் கிண்டலடிக்கின்றனர். அவர்களுக்கு சவால் விடுகிறேன். தேவையான வசதிகளை செய்து தருகிறோம். உங்களால், ஒரு நாள், அந்த குகையில் தங்கி, தியானம் செய்ய முடியுமா? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X