இந்தோனேசியா அதிபராக விடோடோ மீண்டும் தேர்வு

Added : மே 22, 2019
Share
Advertisement
ஜகார்த்தா : இந்தோனேசியா அதிபராக ஜோகோ விடோடோ மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் கடந்த மாதம் 17ல் அதிபர் தேர்தல்நடந்தது. இதில் இப்போது அதிபராக உள்ள ஜோகோ விடோடோ முன்னாள் ராணுவ தளபதி பிரபோவோ சுபியண்டோ ஆகியோர் போட்டியிட்டனர். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் விடோடோ 55 சதவீத ஓட்டுகள் பெற்று மீண்டும்
 ஜகார்தா  ,ஜோகோ விடோடோ,அதிபர் தேர்தல்,சுபியண்டோ, முறைகேடு

ஜகார்த்தா : இந்தோனேசியா அதிபராக ஜோகோ விடோடோ மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் கடந்த மாதம் 17ல் அதிபர் தேர்தல்நடந்தது. இதில் இப்போது அதிபராக உள்ள ஜோகோ விடோடோ முன்னாள் ராணுவ தளபதி பிரபோவோ சுபியண்டோ ஆகியோர் போட்டியிட்டனர். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் விடோடோ 55 சதவீத ஓட்டுகள் பெற்று மீண்டும் அதிபராக வெற்றி பெற்றுள்ளார். சுபியண்டோவுக்கு 44 சதவீத ஓட்டுகள் கிடைத்து உள்ளன.

தோல்வியை ஏற்றுக் கொள்ளாத சுபியண்டோ "தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது. முறைகேடு மூலம்தான் ஜோகோ வெற்றி பெற்றுள்ளார்" என்றார்.

இதனால் அவரது ஆதரவாளர்கள் தலைநகர் ஜகார்தாவில் போராட்டங்களில் ஈடுபடுவார்கள் என தெரிய வந்துள்ளது.

தேர்தல் முடிவுகளை எதிர்த்து நடக்கும் போராட்டத்தின் போது குண்டுகளை வெடிக்க சதி திட்டம் தீட்டியிருந்ததாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் 31 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.இந்தோனேசியா அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள விடோடோவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். மோடி அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் 'ஜோகோவுடன் இணைந்து பணியாற்றி இருதரப்பு உறவுகளை மேம்படுத்த தயாராக உள்ளேன்' என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X