இந்தியாவுக்கான பாக்., தூதர் நியமனம்

Added : மே 22, 2019 | கருத்துகள் (3)
Advertisement
இஸ்லாமாபாத், இம்ரான் கான், மொய்னுல் ஹக், துாதர்,ஒப்புதல்

இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கான பாக்., தூதராக மொய்னுல் ஹக் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.


'இந்தியாவில் அமையவுள்ள புதிய அரசுடன் பேச்சு நடத்துவது தொடர்பான விஷயத்தில் மொய்னுல் ஹக் முக்கிய பங்கு வகிப்பார்' என பாக்., அறிவித்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் இந்தியா, சீனா, ஜப்பான் நாடுகளுக்கு புதிய துாதர்களை நியமிப்பதற்கு நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி இந்தியாவுக்கான துாதராக தற்போது பிரான்ஸ் துாதரகத்தில் பணியாற்றும் மொய்னுல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பாக். பிரதமர் இம்ரான் கானுடன் பேச்சு நடத்திய பின் அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் நடந்த லோக்சபா தேர்தல் முடிவுக்கு வந்துள்ளது. புதிய அரசு விரைவில் அமையவுள்ளது. அண்டை நாடு என்ற முறையில் இந்தியாவுடனான நட்பு எங்களுக்கு மிக முக்கியமானது. எனவே சமீபத்திய கசப்பான சம்பவங்களால் தடைபட்டுள்ள அமைதி பேச்சை துவக்குவதற்கு பாக். ஆர்வமாக உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நடக்கவுள்ள பேச்சில் மொய்னுல் ஹக்கின் பங்கு முக்கியமானதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
22-மே-201913:27:10 IST Report Abuse
narayanan iyer நாமும் ஆண்டாண்டு காலமாக பேசிக்கொண்டே இருக்கிறோம் . அந்த பேச்சுக்களில் இருபுறத்து தேவைகளும் விவாதிக்கப்பட்டு இருக்கிறது . அதை ஆதாரமாகக்கொண்டு முடிவுதான் எடுக்கவேண்டுமே தவிர மீண்டும் பேசி ஒன்றும் ஆகபோவதில்லை . ஆக்கிரமித்து இருக்கும் இந்திய பகுதிகளை இந்தியாவிற்கு கொடுத்துவிட்டு நிம்மதியாக பாகிஸ்தான் இருக்கவும் அதன் வளர்ச்சிக்கு பாடுபடவும் செய்யலாம்
Rate this:
Share this comment
Cancel
tamilan - கோயம்புத்தூர்,இந்தியா
22-மே-201909:37:01 IST Report Abuse
tamilan இதுவரை இந்த பதவியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் சித்துவிற்கு வேறு பதவி உண்டா?..
Rate this:
Share this comment
Cancel
S.kausalya - Chennai,இந்தியா
22-மே-201908:18:48 IST Report Abuse
S.kausalya இந்தியா விற்கான பாக் தூதர் இஸ்லாமியராக உள்ளார். பாகிஸ்தானுக்கு ஆன இந்திய தூதரும் இஸ்லாமியராக உள்ளனர். என்ன சொல்வது? புரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X