பொது செய்தி

இந்தியா

டிக்கெட் ரத்தால் ரயில்வேக்கு வருவாய் ரூ.5,366 கோடி!

Updated : மே 22, 2019 | Added : மே 22, 2019 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, பின் ரத்து செய்வதால், கிடைக்கும் அபராதத் தொகையின் மூலம் ரயில்வேக்கு ரூ.5,366 கோடி வருவாய் கிடைத்துள்ளது.கடந்த 2015ம் ஆண்டு முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து, பின் ரத்து செய்தால், ரயில்வே அபராதத்தொகை பிடித்து வருகிறது. உதாரணமாக, படுக்கை வசதி கொண்ட இருக்கையை முன்பதிவு செய்து ரத்து செய்தால், ஒரு நபருக்கு ரூ.60 அபராதம்

புதுடில்லி: ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, பின் ரத்து செய்வதால், கிடைக்கும் அபராதத் தொகையின் மூலம் ரயில்வேக்கு ரூ.5,366 கோடி வருவாய் கிடைத்துள்ளது.latest tamil news
கடந்த 2015ம் ஆண்டு முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து, பின் ரத்து செய்தால், ரயில்வே அபராதத்தொகை பிடித்து வருகிறது. உதாரணமாக, படுக்கை வசதி கொண்ட இருக்கையை முன்பதிவு செய்து ரத்து செய்தால், ஒரு நபருக்கு ரூ.60 அபராதம் விதிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 3 முதல் 5 பேர் ரத்து செய்யும்பட்சத்தில், ரூ.180 முதல் ரூ.300 வரை அபராதம் வசூலிக்கப்படும். இதனால், பயணிகளுக்கு பண நஷ்டம் ஏற்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2015 - 2019 வரையிலான காலகட்டத்தில், முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை ரத்து செய்வதால், இந்திய ரயில்வேக்கு ரூ.5,366.53 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 2017 - 18ம் நிதியாண்டில் ரூ.1,205.96 கோடி வருவாயும், கடந்த 2018 - 19ம் நிதியாண்டில், ரூ.1,852.50 கோடி வருவாயும் கிடைத்துள்ளன.


latest tamil news
அதே சமயம் தென்னக ரயில்வே, 2017 - 18ல், ரூ.176.76 கோடியும், 2018 - 19ல் ரூ.182.56 கோடியும் அபராதம் மூலம் வருவாய் ஈட்டியுள்ளன. தெலுங்கானா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, ம.பி.,யில் 500 சதவீதம் வருவாய் கிடைத்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shanmuga Sundaram - Bangalore,இந்தியா
22-மே-201914:24:59 IST Report Abuse
Shanmuga Sundaram day light robbery in the name of supporting railway operation - per user name - there should be 2 or 3 "grace" cancellation in a year
Rate this:
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
22-மே-201913:31:14 IST Report Abuse
S.P. Barucha ரயில்வேயில் வேலை செய்கிறவர்கள் அங்கு வேலை செய்யாமல் ஏமாற்றுகிறார்கள், மக்களை ரயில்வே ஏமாற்றுகிறது. நல்ல வருமானம் ஈட்டி தரும் திருச்சி சேலம் பயணிகள் ரயிலில் பல ஆண்டுகளாக கழிவறை வசதி கிடையாது. பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பொய்யாக பதில் சொல்லுகிறார்கள். மக்களின் தேவைகளையும், சிரமங்களையும் அதிகாரிகள் புரிந்து செயல்படவேண்டும்.
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
22-மே-201912:42:42 IST Report Abuse
JeevaKiran வெயிட்டிங் லிஸ்டில் இருந்து கடைசிவரை கண்பார்ம் ஆகாமல் இருந்தால் அதற்கு கேன்சல் சார்ஜ் பிடிக்கக்கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X