மீடியாக்களுடன் பேச அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தடை| ED gags its own officers: Report colleagues who speak to media | Dinamalar

பொது செய்தி

இந்தியா

மீடியாக்களுடன் பேச அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தடை

Updated : மே 22, 2019 | Added : மே 22, 2019 | கருத்துகள் (8)
Share
அமலாக்கத்துறை, மீடியா

புதுடில்லி: அமலாக்கத்துறை அதிகாரிகள் யாரும் மீடியாக்களுடன் பேசக்கூடாது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அமைப்பின் இயக்குனர் எஸ்கே மிஸ்ரா எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக ஊழியர்களுக்கு அவர் சுற்றறிக்கை: விசாரணையில் உள்ள சில வழக்குகளின் விவரங்கள் மீடியாவில் வருவது தெரியவந்துள்ளது. இது போன்ற முக்கிய விஷயங்கள் வெளியில் வருவது விசாரணையை பாதிக்கும். இதனால், மீடியாக்களை சந்திக்கும் அதிகாரம் பெற்றவர்களை தவிர மற்ற எந்த அதிகாரிகள் யாரேனும் மீடியாக்களை சந்திப்பது தெரியவந்தால், உயரதிகாரிகளுக்கு தெரியபடுத்த வேண்டும். இந்த உத்தரவை மீறுவது என்பது பணியில் அலட்சியாக இருப்பதாக கருதப்படுவதுடன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற உத்தரவு கடந்த 2018 நவ.,30 அன்று பிறப்பிக்கப்பட்டது. ஆனால், யாரும் இதனை முறையாக பின்பற்றவில்லை. இதனால், தற்போது இந்த உத்தரவு மீண்டும்பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news
இது தொடர்பாக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், மீடியாக்களுடனான சந்திப்பு முறையாக நடந்து வருகிறது. முக்கிய வழக்குகளில் முன்னேற்றம் குறித்து தகவல்கள் வழங்கி வருகிறோம். இயக்குனர் அல்லது அதிகாரம் பெற்ற அதிகாரியுடன் மட்டும் தான் மீடியாக்கள் சந்திக்க வேண்டும். விசாரணை அதிகாரியை சந்திக்க மீடியாக்களுக்கு அனுமதியில்லை. குறிப்பிட்ட வழக்குகளின் விவரங்கள் வெளியாகும் போது, விசாரணையில் பாதிப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X