ஆட்சியை பிடித்து விடலாம் : நம்பிக்கையில் எதிர்க்கட்சிகள்

Updated : மே 22, 2019 | Added : மே 22, 2019 | கருத்துகள் (30)
Advertisement

புதுடில்லி : லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பில் 14 ல் 12 கருத்துகணிப்புக்கள் பா.ஜ., 300 இடங்களுக்கு மேல் பிடித்து, தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்துள்ளன. ஆனால் கருத்துகணிப்புக்கள் பொய்யானவை என கூறி வரும் எதிர்க்கட்சிகள், மத்தியில் எப்படியும் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன், தொடர்ந்து பல வழிகளிலும் முயற்சித்து வருகின்றன.







பல சமயங்களில் கருத்துகணிப்புக்கள் பொய்யாகும் என்பதால், பா.ஜ., வுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, காங்., தலைமையில் புதிய ஆட்சி அமைய துணை நிற்கலாம் என தேசியவாத காங்., தலைவர் சரத்பவார் முனைப்புடன் உள்ளார். இதனால் பல கட்சிகளையும் இணைக்க அவர் கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். 3வது அணி அமைக்க சந்திரபாபு நாயுடு ஒரு புறமும், சந்திரசேகர ராவ் ஒருபுறமும் முயற்சி எடுத்து வருகின்றனர். இதனால் பல மாநில முதல்வர்களையும், கட்சி தலைவர்களையும் இவர்கள் சந்தித்து வருகின்றனர்.






இது ஒருபுறம் இருக்க சரத்பவாரும் ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவ், நவீன் பட்நாயக் ஆகியோரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளதாக கூறப்படுகிறது. ஜெகன் மோகனை தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் சந்திரசேகர ராவும், நவீன் பட்நாயக்கும் மத்தியில் காங்., தலைமையில் ஆட்சி அமைய ஆதரவு தருவார்கள் என நம்புகிறார் சரத்பவார்.

மம்தா, மாயாவதி, அகிலேஷ், ராகுல், சோனியா ஆகியோரை தொடர்ந்து கர்நாடகா முதல்வர் குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோரை சந்தித்து கூட்டணி சேர்க்க பேச்சு நடத்தி வரும் சந்திரபாபு நாயுடுவுடன் தொடர்பில் இருந்து வருகிறார் சரத் பவார். சமீபத்தில் பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகிய சந்திரபாபு நாயுடு, தங்களுக்கு நிச்சயம் ஆதரவு தருவார் என்றும், நவீன் பட்நாயக்கும், காங்.,ன் கமல்நாத்துடன் பால்ய நண்பர்கள் என்பதால் நவீன் பட்நாயக்கும் தங்கள் பக்கம் வந்து விடுவார் என்றும் சரத்பவார் நம்புகிறார்.






நவீன் பட்நாயக் யாருக்கும் தனது ஆதரவை கூறவில்லை என்றாலும், புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவிற்கு அதிக நிதி தரும் எந்த கட்சியையும் ஆதரிக்க தயார் என அறிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
22-மே-201920:17:06 IST Report Abuse
spr யார் யார் பேரிலெல்லாம் வழக்கு பதியப்பட்டு நீதிமன்றத்த தீர்ப்புக்காக காத்திருக்கிறோமோ யார் யார் பேரிலெல்லாம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறதோ (பதவி பற்றியெல்லாம் கவலைப்படாமல்) அவர்கள் அனைவரின் பாஸ்போர்ட், விசா, வங்கி கணக்கு என அனைத்தையும் அடுத்து ஆட்சிக்கு வரும் அரசு முடிவு செய்யும் வரை முடக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உடனடியாக இன்றே ஒரு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் இல்லையெனில் பல குற்றவாளிகள் வெளிநாட்டுக்குத் தப்பி விடுவார்கள் பிறகு அவர்களை பிடிக்க அலைய வேண்டியிருக்கும்
Rate this:
Share this comment
Cancel
INNER VOICE - MUMBAI,இந்தியா
22-மே-201919:18:36 IST Report Abuse
INNER VOICE மோடி என்கிற ஒரு நல்ல தனி மனிதரை எதிர்த்து இத்தனை பேரா? வெட்கமா இல்லை? ரஜினி பட வசனம் ஞாபகம் வருகிறது " சிங்கம் சிங்கிளா வரும், .... தான் கூட்டமாய் வரும்"
Rate this:
Share this comment
Cancel
Agni Kunju - Singapore,சிங்கப்பூர்
22-மே-201918:17:41 IST Report Abuse
Agni Kunju ஒரு நல்லவன அழிக்க எத்தன பித்தலாட்டக்காரனுங்க ஒன்னு சேர்ரானுங்கப்பா? இதே மாதிரி எந்த நல்லதுக்காவது சேர்ரானுங்களா?... எங்க நதி நீர் இணைப்புக்கு சேர சொல்லுங்க பார்ப்போம் ... மொத்த அயோக்கியர்களையும் தொங்க விடனும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X