எதிர்க்கட்சிகள் கோரிக்கை: தேர்தல் கமிஷன் நிராகரிப்பு

Updated : மே 22, 2019 | Added : மே 22, 2019 | கருத்துகள் (42)
Advertisement

புதுடில்லி : விவிபேட் ஓட்டுகளை எண்ணிய பிறகு மற்ற ஓட்டுகளை எண்ண வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோிக்கையை தேர்தல் கமிஷன் நிராகரித்தது.






7 கட்டங்களாக நடத்தப்பட்ட லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் நாளை (மே 23) எண்ணப்பட உள்ளன. இந்நிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுக்களை எண்ண துவங்குவதற்கு முன் ஒப்புகைச்சசீட்டு இயந்திரங்களில் பதிவான ஓட்டுக்களை எண்ண வேண்டும் என தேர்தல் கமிஷனிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.
இந்த கோரிக்கை தொடர்பாக தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியது. ஒருவேளை எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் கமிஷன் ஏற்றிருந்தால், ஓட்டு எண்ணிக்கை துவங்குவதற்கே பிற்பகல் ஆகலாம் எனவும், முன்னிலை நிலவரம் வெளியாக மாலை ஆகலாம் எனவும் தேர்தல் கமிஷன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.




ஒப்புகை சீட்டு இயந்திரங்களில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்ட பிறகே தபால் ஓட்டுக்கள் எண்ணப்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஓட்டு எண்ணிக்கை நடைமுறை தாமதமானால் முழுமையான தேர்தல் முடிவுகள் விபரம் வெளியாக 2 முதல் 3 நாட்கள் வரை ஆகலாம் எனவும் கூறப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் தாமதமானால் அதுவும் ஆளும் கட்சிக்கு சாதகமாக அமைந்து விட வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் கலக்கத்தில் இருந்தன


நிராகரிப்பு:

இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் கமிஷன் நிராகரித்தது. வழக்கம்போலவே ஓட்டுகள் எண்ணப்படும் என்று கமிஷன் அறிவித்துள்ளது..

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனு, கூடுவாஞ்சேரி வாதத்திற்கு மருந்து உண்டு. விதன்டா வாதத்திற்கு மருந்து கிடையாது. இந்த எதிர்கட்சிகள் செய்வது விதன்டாவாதம். இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் தேர்தலை தேர்தல் கமிஷன் நடத்தட்டும். முடிவை மட்டும் நாங்கள் சொல்லுவோம். பாவம்.
Rate this:
Share this comment
Cancel
raaj - surat,இந்தியா
22-மே-201920:09:18 IST Report Abuse
raaj தேர்தல் ஆணையம் ஒத்துக்கிட்டா என்ன குறைந்து விடுவீர்கள் பிஜேபி 50 சீட் கூட கிடைக்காது ஏன் மோடியே தோற்க வாய்ப்புள்ளது அந்த குளறுபடியே கண்டுபிடித்தால் அம்பானி ஜனதிபதி பிரதமர் அனைவரும் உள்ளெ போகணும் இந்தியா நாட்டுக்கே அவமானம் என்ன செய்ரது கொள்ளை கும்பல் கிட்டே நாடும் மக்களும் மாட்டிக்கொண்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
sridhar - Chennai,இந்தியா
22-மே-201920:07:16 IST Report Abuse
sridhar எதிர் கட்சிகளுக்கு விழும் ஓட்டுக்களை மட்டுமே எண்ண வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கலாம். எளிதாக எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெறலாம். .... போக்கத்த பசங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X