அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று

Added : மே 22, 2019 | கருத்துகள் (1)
அனல் காற்று, 3 நாட்கள், வானிலை

சென்னை: அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் அனல் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு பருவமழை துவங்குவதற்கான சாதக சூழல் மே 19 மற்றும் 20ல் நிலவும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் அடுத்த மூன்று தினங்களில் துவங்கும் என தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

வழக்கமாக தென்மேற்கு பருவமழை மே இறுதி வாரத்தில் தொடங்கும் எனவும், ஆனால் இந்தாண்டுக்கான தென்மேற்கு பருவமழை ஜூன் 6ல் தொடங்கும் என்றும் கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிலவும் அனல் காற்று அடுத்த 3 நாட்களுக்கு தொடரும் எனவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X