சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சேலத்தில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

Updated : மே 22, 2019 | Added : மே 22, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement

சேலம் : சேலத்தில், வீட்டுக்கு வெளியில் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது குழந்தை கடத்தப்பட்டது. சிறிது நேரத்தில் தனிப்படை போலீசார் மீட்டனர்.

சேலம் நால்ரோடு பகுதியில் உள்ளது தம்மணன் காலனி. இங்கு வீட்டிற்கு வெளியில் யோகேஸ்வரன் என்ற 3 வயது குழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தது. அப்போத, சேலைத் தலைப்பால் முகத்தை மூடிய படி வந்த 2 பெண்கள் குழந்தையை துாக்கிச்சென்றனர்.
இது அப்பகுதி சிசிடிவி கேமராக்களில் தெளிவாக பதிவாகி இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். இதனிடையே, குழந்தையின் பெற்றோரிடம் புகாரை பெற்ற சேலம் மாநகர போலீஸ் கமிஷனர், உதவி கமிஷனர் தலைமையில் தனிப்படை ஒன்றை அமைத்துள்ளார்.
கடத்தப்பட்ட குழந்தை விரைவில் மீட்கப்படும் என்றும், அப்பகுதியில் உள்ள 5 சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ய இருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.
இந்த நிலையில் டூ வீலரில் கடத்தப்பட்ட குழந்தையை சேலம் முள்ளகாடு பகுதியில் பத்திரமாக மீட்டுள்ளனர். கடத்தியவர்கள் சேலத்தாம்பட்டி பகுதியில் குழந்தையை விட்டுச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடத்தல்காரர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashwanth - TIRUCHIRAPPALLI,இந்தியா
22-மே-201917:13:56 IST Report Abuse
Ashwanth குழந்தைக்கும் தி மு க வுக்கும் என்ன சம்பந்தம் புரியல . கண்டுபுடிச்சு காப்பாத்துன போலீஸ்க்கு வாழ்த்துக்கள் சொல்லலாம். அதைவிடுத்து எதுக்கு சார் .
Rate this:
Cancel
tamilan - கோயம்புத்தூர்,இந்தியா
22-மே-201916:25:23 IST Report Abuse
tamilan ஆட்சிக்கு கெட்டபெயரை ஏற்படுத்த திமுக இப்படியெல்லம் செய்கிறது......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X