ஓட்டு எண்ணிக்கை: தேர்தல் அதிகாரி விளக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணிக்கை: தேர்தல் அதிகாரி விளக்கம்

Added : மே 22, 2019 | கருத்துகள் (1)
ஓட்டு எண்ணிக்கை, சத்யபிரதா சாஹூ,

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியதாவது: தமிழகத்தில் 45 ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தபால் ஓட்டு, மின்னணு ஓட்டு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளை எண்ணுவதுடன் துவங்கும். முடிவுகள், முன்னிலை விவரம் அவ்வபோது அறிவிக்கப்படும். தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும். ஓட்டு எண்ணிக்கையை பார்வையிட 88 பார்வையாளர்கள் வந்துள்ளனர். அவர்கள் முன்னிலையில் ஓட்டு எண்ணிக்கை நடக்கும். ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுகளும் அவர்களின் ஒப்புதல் பெற்று அறிவிக்கப்படும். தேர்தல் பாதுகாப்பு பணியில் 36 ஆயிரம் போலீசாரும், 19 கம்பெனி துணை ராணுவ படையினரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.ஓட்டு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும். அதிகபட்சமாக, திருவள்ளூரில் 34 சுற்றுகளும், மத்திய சென்னையில் குறைந்தபட்சமாக 19 சுற்றுகளும் எண்ணப்பட உள்ளன. ஓட்டு எண்ணிக்கையில் 17 ஆயிரம் பேர் ஈடுபடுகின்றனர். ஓட்டு எண்ணிக்கையில் தாமதம் இருக்காது. உடனுக்குடன் முடிவுகள் வெளியிடப்படும். மின்னணு இயந்திரங்களில் உள்ள ஓட்டுச்சீட்டுகள் எண்ணி முடித்த பின்னரே ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும். ஒரு சுற்று முடிவு வெளிவர 30 நிமிடம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X