கள்ள ஓட்டு ; ஆந்திராவில் 10 அதிகாரிகள் சஸ்பெண்ட்

Updated : மே 22, 2019 | Added : மே 22, 2019 | கருத்துகள் (3)
Advertisement
ஆந்திரா, அதிகாரிகள் சஸ்பெண்ட், சிவகிரி

திருப்பதி : ஆந்திர மாநிலத்தில், கள்ள ஓட்டுப் போடுவதற்கு துணை போனதாக எழுந்த புகாரில், 5 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆந்திராவில், 175 சட்டசபை தொகுதிகளுக்கும், 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 11-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், சித்தூர் மாவட்டம், சந்திரகிரி சட்டமன்ற தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியினர் 5 வாக்குச்சாவடி மையங்களில் கள்ள ஓட்டு போட்டதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்தனர். இது போல் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசார் 2 ஓட்டு சாவடி மையங்களில் கள்ள ஓட்டு போட்டதாக தெலுங்கு தேசம் கட்சியினரும் புகார் அளித்தனர்.

இதையடுத்து, சந்திரகிரி சட்டமன்ற தொகுதியில் உள்ள 7 மையங்களில் கடந்த 19-ந் தேதி மறு ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதில், முதல் கட்டமாக புலிவருத்தி பல்லி, என்.ஆர்.கம்மப்பல்லி, கொத்தகண்டிகை, கம்மப்பல்லி, வெங்கடராமாபுரம் ஆகிய 5 ஓட்டு சாவடிகளில் கள்ள ஓட்டு போட துணை போனதாக, அதிகாரிகள் முரளி கிருஷ்ணா, குணசேகர்ரெட்டி, செஞ்சய்யா, மகபூப்பாஷா, ஜானகிராம்ரெட்டி, மது, முரளிதர்ரெட்டி, ஸ்ரீதேவி, கங்காதரய்யா, வெங்கட்ரமணா மாதங்கி ஆகிய 10 பேரை சஸ்பெண்டு செய்து சித்தூர் கலெக்டர் பிரத்யும்னா உத்தரவிட்டார்.

தெலுங்குதேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து அகில இந்திய அளவில் குறைகூறி வருகிறார். ஆனால், அவரது மாநிலத்தில், அவரது கட்சியினருக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamilan - கோயம்புத்தூர்,இந்தியா
22-மே-201919:53:26 IST Report Abuse
tamilan நாயுடுவுக்கு கருணாநிதி போல ஊழல் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களை நம்பியுள்ளார்.....ஆனாலும் ஆந்திரா மக்களும் கருணாநிதி போல ஊழல் செய்த செய்துள்ள செய்யப்போகும் நாயுடுவை விரும்பவில்லை.......... எனவே காரணம் தேடி அலைகிறார் ஊழல் நாயுடு......
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
22-மே-201918:09:55 IST Report Abuse
Cheran Perumal நாயுடு நமது மறைந்த கருணா போல மாறிக்கொண்டு வருகிறார். அவரது அரசியல் முடிவு ஆரம்பமாகிறது.
Rate this:
Share this comment
Cancel
Achchu - Chennai,இந்தியா
22-மே-201917:06:07 IST Report Abuse
Achchu யார் மஞ்சள் குளிக்கிறாங்களோ அவங்கதானே ஓட்றான் ஓட்றான் னு கூவுவாங்க சகஜம்தாங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X