மீண்டும் மோடியா?: கலக்கத்தில் பாக்.,

Updated : மே 22, 2019 | Added : மே 22, 2019 | கருத்துகள் (35)
Share
Advertisement

இஸ்லாமாபாத் : இந்தியாவின் பிரதமராக மீண்டும் மோடி வருவதை பாக்., மக்கள் விரும்பவில்லை என அந்நாட்டு டிவி சேனல்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.



latest tamil news


கருத்துக் கணிப்புகள் பா.ஜ., வுக்கு சாதகமாக கூறப்பட்டிருந்தாலும் பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வருவதையும், மோடி மீண்டும் பிரதமராவதையும் தடுக்க இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் கடுமையாக முயற்சித்து வருகின்றன. நாளை வெளியாக உள்ள இந்திய லோக்சபா தேர்தல் முடிவுகளை உற்று கவனிக்கும் நாடுகளில் முன்னணியில் இருப்பது பாகிஸ்தான்.


latest tamil news


பாக்., பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படை நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு பிறகு இந்தியா மீது பயத்தில் உள்ளது பாகிஸ்தான். பாக்.,ல் வசிக்கும் பலரின் உறவினர்கள் இந்தியாவில் உள்ளனர். சர்ஜிக்கல் ஸ்டிரைக்கால் ஏற்பட்டுள்ள பீதியின் எதிரொலியாக இந்தியாவில் மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி அமைவதை பாக்.,ல் உள்ள பெரும்பாலான மக்கள் விரும்பவில்லை என அந்நாட்டு டிவி சேனல்களிலும், சமூக வலைதளங்களிலும் பொதுமக்கள் சிலரின் பேட்டிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.


latest tamil news


பாக்.,ல் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதால் மோடி மீண்டும் வர கூடாது என ஒரு சிலரும், பெரும்பான்மையுடன் மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவார் என்பதை நம்பவில்லை. அப்படி வராமல் இருப்பது தான் பாக்.,க்கு நல்லது என சிலரும் கூறி உள்ளனர். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா - பாக்., இடையே மீண்டும் அமைதி பேச்சு நடத்தப்படுவதற்கான சூழ்நிலை உருவாக அதிக வாய்ப்பு உள்ளதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C.Ayyappan - chennai,இந்தியா
01-ஜூன்-201909:07:33 IST Report Abuse
C.Ayyappan தேச துரோகிகளும், கொள்ளைகாரர்களும், ரௌடிகளும், ஒழுக்கம் கெட்டவர்களும், ஊழல் செய்து மக்கள் பணத்தை சுரண்டியவர்களும், பாகிஸ்தானியர்களும், பாகிஸ்தானை ஆதரிப்பவர்களும் தான் மோடிஜிக்கு பயப்படுகிறார்கள். நல்லவர்கள், நேர்மையானவர்கள், நாணயஸ்தர்கள், தேசபக்தி கொண்டவர்கள் எல்லோரும் மோடிஜி பின்னே... அவரை மீண்டும் வரவேற்க காத்திருக்கிறார்கள். ஜெய் ஹிந்த்
Rate this:
Share this comment
Cancel
Kumar periyaar - Chennai,இந்தியா
30-மே-201914:03:31 IST Report Abuse
Kumar periyaar இவர் வந்தால் அவர்களுக்கு என்ன யார் வந்தால் அவர்களுக்கு என்ன, நாம் நம் நாட்டின் முன்னேற்றதேயும் வேலை வாய்ப்புகளையும் வளர்க்க வேண்டும். சும்மா பாகிஸ்தானை வைத்து அரசியல் செய்வதால் என்ன லாபம்.
Rate this:
Share this comment
Cancel
P.K. GANESAN - chennai ,இந்தியா
23-மே-201913:26:24 IST Report Abuse
P.K. GANESAN நீ என்ன தான் கூவினாலும் பலன் இருக்காது. ஜெலுசில் ஒரு வண்டி நிறைய வாங்கி வைத்துக் கொள்ளவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X