ரபேல் திட்ட அலுவலகம் மீது தாக்குதல்| Dinamalar

ரபேல் திட்ட அலுவலகம் மீது தாக்குதல்

Added : மே 22, 2019 | கருத்துகள் (3)

பாரிஸ் : பிரான்சின் பாரிஸ் புறநகர் பகுதியில் அமைந்துள்ளது இந்திய ரபேல் திட்ட மேலாண்மை குழு அலுவலகம். இந்த அலுவலகம் மீது மர்மநபர்கள் சிலர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்திய பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பான விபரங்களை திருடுவதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஹார்டிஸ்க் அல்லது ஆவணங்கள் ஏதும் திருடப்படவில்லை என ஏஎன்ஐ* செய்தி நிறுவனத்திற்கு இந்திய விமானப்படை அளித்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரபேல் ஒப்பந்த விவகாரம் இந்திய அரசியலில் மிகப் பெரிய புயலை கிளப்பியது. லோக்சபா தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் ரபேல் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X