பொது செய்தி

இந்தியா

பாக்.,கிற்கு சீன போர் விமானங்கள்

Added : மே 22, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
பாக்., சீன போர் விமானங்கள்

இஸ்லாமாபாத் : பல்வேறு புதிய மாற்றங்களுடன் வடிவமைக்கப்பட்ட ஜே.எஃப். 17 நவீன ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு முதல் முறையாக சீனா அனுப்பியுள்ளது.

சீனாவும் பாகிஸ்தானும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போர் விமானங்கள் தயாரிப்பு மற்றும் மேம்பாடு குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி ஒற்றை என்ஜின் கொண்ட இலகு ரக ஜே.எஃப். 17 ரக போர் விமானங்களை தயாரிப்பது என முடிவு செய்யப்பட்டது.

அந்த வகையில் முதற்கட்டமாக கடந்த 2007ம் ஆண்டு அனுப்பப்பட்ட விமானங்கள், பாகிஸ்தான் விமானப்படையில் சேர்க்கப்பட்டன. தொடர்ந்து போர் விமான தொழில்நுட்பத்தில் இருநாடுகளும் ஒத்துழைத்து வருகின்றன.

இந்நிலையில் அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக தற்போது புதிய மாற்றங்களுடன் சீரமைக்கப்பட்ட பல்திறன் கொண்ட ஜே.எஃப். 17 ரக போர் விமானங்களை இஸ்லாமாபத்திற்கு சீனா அனுப்பியுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் விமானப் படை கூடுதல் பலம் பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனை இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் கவனமாக கண்காணித்து வருவதாக, இந்திய அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JSS - Nassau,பெர்முடா
11-ஜூன்-201920:46:40 IST Report Abuse
JSS ஒற்றை என்ஜினை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய mudiyathu. நமது தேஜஸ் விமானம் JF17 விமானத்தை விட பலமடங்கு சிறந்தது..
Rate this:
Share this comment
Sri Sam - Karaikudi,இந்தியா
12-ஜூன்-201914:48:42 IST Report Abuse
Sri SamFYI Tejas is also single engine Light combat aircraft. Tejas is better than JF17 in some aspects like avionics, fly by wire and radars but in same time JF17 has larger range and Higher ceiling....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X