பொது செய்தி

இந்தியா

பிரமோஸ் 'சூப்பர் சோனிக்' சோதனை வெற்றி

Updated : மே 22, 2019 | Added : மே 22, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடெல்லி : போர் விமானத்திலிருந்து பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.இந்தியா - ரஷியா கூட்டு தயாரிப்பான 'பிரமோஸ் சூப்பர்சோனிக்' ஏவுகணை சுமார் 3 ஆயிரம் கிலோ எடை கொண்டதாகும். 200 கிலோ வெடிப் பொருளுடன் 290 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்டதாகும்.இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட பாதையில் செல்லும்போது,

புதுடெல்லி : போர் விமானத்திலிருந்து பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



இந்தியா - ரஷியா கூட்டு தயாரிப்பான 'பிரமோஸ் சூப்பர்சோனிக்' ஏவுகணை சுமார் 3 ஆயிரம் கிலோ எடை கொண்டதாகும். 200 கிலோ வெடிப் பொருளுடன் 290 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்டதாகும்.

இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட பாதையில் செல்லும்போது, தேவைப்பட்டால் இலக்கிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் இலக்கின் போக்குக்கு ஏற்ப திசைமாறி விலகிச் சென்றும் தாக்கும் ஆற்றல் படைத்தது.


latest tamil news



கடந்த 2001-ம் ஆண்டு முதன் முதலில் தரையில் இருந்து பரிசோதிக்கப்பட்ட இந்த ஏவுகணை தொடர்ந்து 2003-ம் ஆண்டு கடலில் இருந்தபடி விண்ணில் ஏவி பரிசோதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான எஸ்.யு-30 எம்.சி.ஐ.,. போர் விமானத்தில் இருந்து இன்று ஏவி பிரமோஸ் ஏவுகணை இன்று பரிசோதிக்கப்பட்டது.

இந்த பரிசோதனை வெற்றிகரமாக அமைந்ததாகவும் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்ததாகவும் இந்திய பாதுகாப்பு துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Senkolselvan - Coimbatore,இந்தியா
22-மே-201920:29:09 IST Report Abuse
Senkolselvan விமான படைக்கு வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
22-மே-201919:45:36 IST Report Abuse
 nicolethomson இனி பாகிஸ்தான் jf17 பற்றி நிறைய எழுதுவானுங்க
Rate this:
Cancel
22-மே-201919:19:13 IST Report Abuse
Raj Jayaraman Great achievement. Proud moment. Jai Hind.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X