அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக தேர்தல் களத்தை கணிக்க முடியாது - தமிழிசை

Updated : மே 22, 2019 | Added : மே 22, 2019 | கருத்துகள் (5)
Advertisement
தமிழிசை, கணிக்க முடியாது, இருபெரும் ஆளுமைகள்

சென்னை : தமிழகத்தில் இரண்டு பெரும் ஆளுமைகள் இல்லாமல் சந்திக்கும் தேர்தல் என்பதால், தமிழக தேர்தல் களத்தை கணிக்க முடியாது என்று பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், '' 20 ஆண்டு பொது வாழ்க்கைக்கு அங்கீகாரம் தரவேண்டும் என்ற வேண்டுகோளுடன் தூத்துக்குடி மக்களிடம் வாக்குகள் கேட்டேன்.

அதனால், எனக்கு எந்த எதிர்மறையும் கிடையாது. நான் எந்த ஊழல் வழக்கிலும் சிறை தண்டனை பெற்றது கிடையாது. ஒரு நேர்மையான அரசியல்வாதியாக இருந்து வந்ததால், மக்கள் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள், நிச்சயம் நான் வெற்றி பெறுவேன்.

தமிழகம் இரண்டு பெரும் ஆளுமைகள் இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல், எனவே, தேர்தல் களத்தை கணிக்க முடியாது. 3 புதிய முகங்கள் கமல்ஹாசன், டிடிவி தினகரன், சீமான் இவர்கள் எல்லாம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. நிச்சயமாக அதிமுக - பாஜகவிற்கு ஆதரவு தந்திருப்பார்கள். மீண்டும் மோடி வரவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaduvooraan - Chennai ,இந்தியா
23-மே-201908:21:22 IST Report Abuse
Vaduvooraan ஓரளவு இவர் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன். தமிழகத்தை பொறுத்த மட்டில், பெரும்பாலும் வட இந்தியாவை சேர்ந்த அமைப்புகள் கருத்துக்கணிப்பு நடத்தும்போது மக்களிடம் தொடர்பு கொண்டு விபரங்கள் கேட்டறிய தமிழ் தெரிந்த, கணிப்பு நடத்துவதற்கான வசதிகள் உள்ள நம்ம ஊர் செய்தி நிறுவனங்களைத்தான் நாடுவார்கள். பெரும்பாலும் "குற்றம் குற்றமே" என்ற புலவரின் பெயர் தாங்கிய புலனாய்வு வார ஏடு, செய்திகளை முந்தித்தரும் ஏடு நடத்தும் டி.வி அல்லது இந்துமதத்தை கொச்சை படுத்தி ஓவிய கண்காட்சி நடத்திய கல்லூரி குழு. இவர்கள் கணிப்பு எப்படி இருக்குமென்று நமக்கு தெரியாதா? அதை அப்படியே அந்த வட இந்திய நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டு முடிவாய் வெளியிடுவார்கள். வோட்டு எண்ணிக்கை தொடங்கியிருக்கும் இந்த தருணத்திலும் சொல்கிறேன்: திமுக அணியின் வெற்றி மகத்தானதாக இருக்காது ஜெயலலிதா இல்லாது களம் கண்ட அதிமுக பெரிய சரிவையும் சந்திக்காது
Rate this:
Share this comment
Cancel
POPCORN - Chennai ,இந்தியா
23-மே-201907:56:27 IST Report Abuse
POPCORN சரி..சரி..அதுக்கும் ஒங்களும் என்ன சம்பந்தம்
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
23-மே-201907:39:59 IST Report Abuse
ஆரூர் ரங் தூத்துகுடில ரவுடிக் கட்சியை எதிர்த்து வெற்றிகரமான தோல்வியே கிடைச்சாலும் வருத்தப்படவேண்டாம் . நிரந்தர பிரதமர் மோடி கட்சியில் வளர்ச்சிகொடுப்பார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X