தமிழக தேர்தல் களத்தை கணிக்க முடியாது - தமிழிசை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக தேர்தல் களத்தை கணிக்க முடியாது - தமிழிசை

Updated : மே 22, 2019 | Added : மே 22, 2019 | கருத்துகள் (5)
தமிழிசை, கணிக்க முடியாது, இருபெரும் ஆளுமைகள்

சென்னை : தமிழகத்தில் இரண்டு பெரும் ஆளுமைகள் இல்லாமல் சந்திக்கும் தேர்தல் என்பதால், தமிழக தேர்தல் களத்தை கணிக்க முடியாது என்று பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், '' 20 ஆண்டு பொது வாழ்க்கைக்கு அங்கீகாரம் தரவேண்டும் என்ற வேண்டுகோளுடன் தூத்துக்குடி மக்களிடம் வாக்குகள் கேட்டேன்.

அதனால், எனக்கு எந்த எதிர்மறையும் கிடையாது. நான் எந்த ஊழல் வழக்கிலும் சிறை தண்டனை பெற்றது கிடையாது. ஒரு நேர்மையான அரசியல்வாதியாக இருந்து வந்ததால், மக்கள் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள், நிச்சயம் நான் வெற்றி பெறுவேன்.

தமிழகம் இரண்டு பெரும் ஆளுமைகள் இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல், எனவே, தேர்தல் களத்தை கணிக்க முடியாது. 3 புதிய முகங்கள் கமல்ஹாசன், டிடிவி தினகரன், சீமான் இவர்கள் எல்லாம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. நிச்சயமாக அதிமுக - பாஜகவிற்கு ஆதரவு தந்திருப்பார்கள். மீண்டும் மோடி வரவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்,'' என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X