சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.2.25 லட்சம் லஞ்சம் : இன்ஸ்பெக்டர் கைது

Added : மே 22, 2019 | கருத்துகள் (1)
Advertisement

கிருஷ்ணகிரி : பேக்கரி ஊழியர்களிடம் லஞ்சம் பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன். இவர், ஊத்தங்கரையில் பேக்கரி நடத்தும் சரவணன் என்பவரிடம் 2.25 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றபோது, கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பேக்கரி ஊழியர்கள் இருவரை இரவு நீண்ட நேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் நடராஜன், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.அவர்களை விடுவிக்கவும், கடை மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கடை உரிமையாளர் சரவணனிடம், லட்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஊத்தங்கரை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சரவணன் புகார் அளித்துள்ளார். இதையடுத்து ரசாயன ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக கொடுக்கும் போது, அதனைப்பெற முயன்ற இன்ஸ்பெக்டர் நடராஜன் கைது செய்யப்பட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
விவசாயி - Tiruppur,இந்தியா
22-மே-201920:04:16 IST Report Abuse
விவசாயி திமுக வரும் என்ற கணிப்பு வந்த உடனேயே.....திமுக ஆட்கள் தங்களின் வசூல் வேட்டையை ஆரம்பித்துவிட்டனர்...........மக்களே இனி உங்களை காப்பாற்ற யார் உள்ளார்களோ?.....கடவுளே..........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X