ஓட்டு இயந்திரம் சுமக்கும் சிறுவர்கள்!

Updated : மே 22, 2019 | Added : மே 22, 2019 | கருத்துகள் (5)
Advertisement

பாட்னா : பீகாரில், ஓட்டு இயந்திரங்களை தலைச்சுமையாக சிறுவர்கள் சுமந்து செல்லும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலரும் தேர்தல் கமிஷனுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.







தேஜஸ்வி யாதவ் :


ஓட்ப்பதிவு எந்திரங்களை ஓரிடத்திலிருந்து சிறுவர்கள் மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது போன்ற போட்டோ ஒன்றை, பீகாரின் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் வெளியிட்டுள்ளார். இந்த படத்தை வெளியிட்டு ட்விட்டரில் அவர் கூறுகையில், '' பீகாரில் ஓட்டுப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்லும் பணியில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


ஓட்டலுக்கா?


பதிவு செய்யப்படாத வாகனங்களில் இந்த எந்திரங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இது விதிகளை மீறிய செயலாகும். இந்த ஓட்டு மெஷின்கள் முசாபர்பூர் ஓட்டலுக்கு, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கொண்டு செல்லப்படுகின்றன,'' என்று அவர் கூறியுள்ளார்.






கண்டனம் :


நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கிடையே ஓட்டு மெஷினில் முறைகேடு செய்ய முடியும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால், மறுபுறம் சிறுவர்களை எப்படி இந்தப் பணியில் ஈடுபடுத்துகின்றனர் என்ற கண்டனக்குரலும் வலுவாக எழுந்திருக்கிறது.


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
23-மே-201904:37:31 IST Report Abuse
blocked user உள்ளே இருப்பது பதிவு செய்து சீல் வாய்த்த ஓட்டுப்பெட்டியா என்று சொல்லவேண்டும். தவிரவும் உள்ளே என்ன இருக்கிறது என்று யாருக்குத்தெரியும்? வெறுமனே ஓட்டுப்பெட்டி என்று ஒரு படத்தை போட்டு ஏமாற்றுவது கேவலம்.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23-மே-201903:37:13 IST Report Abuse
J.V. Iyer லாலுவின் ஆட்களின் புரளி.
Rate this:
Share this comment
Cancel
23-மே-201903:14:50 IST Report Abuse
ஸாயிப்ரியா மக்களின் எதிர்காலமா, அரசியல் தலைவர்களின் குடும்ப எதிர்காலமா? இந்த சிறுவர்கள் சுமப்பது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X