சுப்ரீம் கோர்ட்டிற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்

Updated : மே 22, 2019 | Added : மே 22, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: சுப்ரீம் கோர்ட்டிற்கு புதிதாக 4 நீதிபதிகள் நியமனம் செய்ததை அடுத்து அனைத்து பணியிடங்களும் முழுமையாக நிரப்பப்பபட்டுள்ளன. சுப்ரீம் கோர்ட்டிற்கு மொத்தம் 31 பணியிடங்கள் உள்ளன. தற்போதைய நிலையில் 27இடங்கள்மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டன. மீதம் 4 இடங்கள் காலியாகஇருந்து வந்தன. இந்நிலையில் மீதமுள்ள காலியிடங்களுக்கான நீதிபதிகளை நியமனம் செய்வற்கு

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட்டிற்கு புதிதாக 4 நீதிபதிகள் நியமனம் செய்ததை அடுத்து அனைத்து பணியிடங்களும் முழுமையாக நிரப்பப்பபட்டுள்ளன.



latest tamil news




சுப்ரீம் கோர்ட்டிற்கு மொத்தம் 31 பணியிடங்கள் உள்ளன. தற்போதைய நிலையில் 27இடங்கள்மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டன. மீதம் 4 இடங்கள் காலியாகஇருந்து வந்தன.


latest tamil news




இந்நிலையில் மீதமுள்ள காலியிடங்களுக்கான நீதிபதிகளை நியமனம் செய்வற்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யகந்த், அனிருத்போஸ் மற்றும் ஏ.எஸ் போபன்னா ஆகியோரின் பெயர்களை கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. இதில் அனிருத்போஸ் என்ற பெயரை மத்திய அரசு நிராகரித்து வந்தது. மீண்டும் கொலிஜியம் அனிருத்போஸ் பெயரை பரிந்துரைத்தது. இதனையடுத்து அவரது பெயரையும் மத்திய அரசு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை அடுத்து சுப்ரீம் கோர்ட்டின் அனைத்து நீதிபதி பணியிடங்களும் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளது.

மேலும் நீதிபதி அனிருத்போஸ் ஜார்கண்ட் மாநில ஐகோர்ட் நீதிபதியாகவும், நீதிபதிபோபன்னா கர்நாடக மாநில ஐகோர்ட் நீதிபதியாகவும், பி.ஆர் கவாய் மும்பை ஐகோர்ட் நீதிபதியாகவும், சூர்யகந்த் இமாச்சல் மாநில ஐகோர்ட் நீதிபதியாகவும் பணியாற்றி வருகின்றனர்.


2 வது தலித் நீதிபதி


தற்போது நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்களில் கவாய் தலித் சமூகத்தை சேர்ந்தவர். கடந்த 2007 ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக தலித் சமூகத்தை சேர்ந்த மற்றும் தமிழகத்தை சேர்ந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார். தற்போது கவாய் 2-வது தலித் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
23-மே-201905:21:07 IST Report Abuse
Darmavan கொலிஜியும் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை..இதில் எத்தனை பேர் எத்தனை சீனியர்களை தாண்டி வந்திருக்கிறார்கள்.என்பது தெரிவிக்கப்படவில்லை..அரசு கோர்ட்டுக்கு பயப்படுவது சரியில்லை.தன அதிகாரத்தை காட்ட வேண்டும்.இந்த முறை முன்பு இல்லாத ஒன்று.
Rate this:
Cancel
22-மே-201921:30:26 IST Report Abuse
Arunachalam சமூகம் பற்றிய குறிப்பு தவிர்க்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X