சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மே 22, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 'டவுட்' தனபாலு


பா.ம.க., இளைஞர் அணி தலைவர், அன்புமணி: நாங்கள், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்தாலும், 'ஹைட்ரோ கார்பன்' திட்டத்தை எதிர்க்கிறோம். கூட்டணியில் இருந்தாலும், எங்களது கொள்கைகளில் மாற்றமில்லை.

டவுட் தனபாலு: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான மனநிலையில் தான், அ.தி.மு.க.,வும் இருக்கு... அதனால், இதைச் சொல்றீங்க... நேற்று முன்தினம், எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பாக, முதல்வர் பேசினாரே... அதைப் பற்றி ஏன் இன்னும் மூச்சே விடாமல் இருக்கீங்க... தேர்தல் முடிவுகளைப் பொறுத்துத் தான், இதற்கு பதில் சொல்வீங்களோ என்ற, 'டவுட்' ஏற்படுதே...!


ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடு: மக்கள் அளித்துள்ள தீர்ப்பை, மாற்றுவதற்கு முயற்சி நடக்கிறது.

டவுட் தனபாலு: எதை வைத்து இப்படி எல்லாம் குற்றஞ்சாட்டுறீங்க... இதுவெல்லாம் சாத்தியமா... அப்படின்னா, கடந்த தேர்தல்களில், நீங்க பெற்ற வெற்றிகளையும், 'டவுட்' படணும்னு, சொல்றீங்களா...!


காங்., மூத்த தலைவர்,குலாம்நபி ஆசாத்: ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், முறைகேடு செய்வதற்கு முன்னோட்டமாகவே, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள், பா.ஜ.,வுக்கு சாதகமாக வெளியிடப்பட்டுள்ளன.

டவுட் தனபாலு: தமிழகத்தில், லோக்சபா தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் கணிப்புகள் எல்லாம், உங்க கூட்டணிக்கு ஆதரவாகத் தானே இருக்கு... ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், உங்கள் சார்பில், முறைகேட்டில் யார் ஈடுபடப் போறாங்க'ன்னு, எவரும், 'டவுட்' எழுப்பினால், யாருக்குங்க சங்கடம்...!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
23-மே-201907:00:50 IST Report Abuse
D.Ambujavalli எட்டு வழிச்சாலை முதல்வரின் sellakkuzhanthai அவரது சம்பந்தியுடன் ஒட்டிக்கொண்டு இவர்களும் ஏதாவது தேற்றலாமே, அப்படியிருக்க வாய்திறக்க என்ன பைத்தியமா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X