கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மார்ட்டின் கேஷியர் மர்ம மரணம்; பிரேத பரிசோதனை வீடியோ ஆய்வு

Updated : மே 23, 2019 | Added : மே 23, 2019 | கருத்துகள் (2)
Advertisement

கோவை : மார்ட்டின் நிறுவன கேஷியரின் பிரேத பரிசோதனை வீடியோவை மாஜிஸ்திரேட் நேற்று ஆய்வு செய்தார்.






கோவை மாவட்டம் காரமடை உருமாண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி 46; கோவை லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தில் கேஷியராக பணியாற்றி வந்தார். மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனங்களில் ஏப். 30ல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது பழனிசாமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் மே 3ம் தேதி காரமடை வெள்ளியங்காடு அருகேயுள்ள குளத்தில் பழனிசாமி சடலமாக கிடந்தார்.

அவரது மகன் ரோகின்குமார் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் 'என் தந்தை தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவரது உடலில் காயங்கள் இருப்பதால் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம். சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.

விசாரித்த ஐகோர்ட் பழனிசாமி மரணம் குறித்து விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதன்படி கோவை ஜே.எம்: 8 மாஜிஸ்திரேட் ராமதாஸ் நியமிக்கப்பட்டு இரண்டு நாட்களில் விசாரித்து சி.ஜே.எம். கோர்ட்டில் அறிக்கை அளிக்க நேற்று முன்தினம் உத்தரவிடப்பட்டது.





பழனிசாமியின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டதால் கோவை அரசு மருத்துவமனை சவ கிடங்கில் உடல் வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை சவ கிடங்குக்கு சென்ற மாஜிஸ்திரேட் ராமதாஸ் ஏற்கனவே பிரேத பரிசோதனை செய்த வீடியோ மற்றும் சடலத்தை ஒப்பிட்டு ஒரு மணி நேரம் ஆய்வு செய்தார். பிரேத பரிசோதனை அறிக்கை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின் காரமடையில் பழனிசாமி சடலமாக கிடந்த இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். காரமடை போலீசார் மற்றும் நேரில் பார்த்த சாட்சிகள் அவரது உறவினர்கள் வக்கீல்களிடம் விசாரித்தார்.

அரசு மருத்துவமனை வட்டாரத்தில் கூறுகையில் 'பழனிசாமி உடல் மற்றும் ஏற்கனவே பிரேத பரிசோதனை செய்த வீடியோவை மாஜிஸ்திரேட் ஆய்வு செய்தார். மறு பிரேத பரிசோதனை செய்வது குறித்து மாஜிஸ்திரேட் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் ஐகோர்ட் முடிவு செய்யும்' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-மே-201904:19:26 IST Report Abuse
ஆப்பு உள்ளூர் ஆளுங்க செய்த மருத்துவ பரிசோதனையை நம்ப முடியாது. விமான நிலையத்தில் உள்ள வடநாட்டு செக்யூரிட்டி கார்டுங்க மாதிரி வெளியூர் டாக்டர்கள் ஆய்வு செய்யணும். கொஞ்சமாவது நம்பலாம்.
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
23-மே-201903:28:44 IST Report Abuse
 Muruga Vel பெரம்பலூர்ல சாதிக் கேஸ்ல என்ன ஆச்சு ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X