இலங்கை தாக்குதலில் சாத்தானின் தாய் வெடிகுண்டு| Dinamalar

இலங்கை தாக்குதலில் 'சாத்தானின் தாய்' வெடிகுண்டு

Updated : மே 23, 2019 | Added : மே 23, 2019 | கருத்துகள் (13)

கொழும்பு : இலங்கையில் நடந்த தற்கொலை தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் 'சாத்தானின் தாய்' வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதை அடுத்து, வெளிநாட்டு தொடர்பு இருப்பதை இலங்கை அரசு உறுதி செய்துள்ளது.






தாக்குதல்


இலங்கையில் ஈஸ்டர் திருநாளில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் என 8 இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 253 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. மேலும், இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டதை அறிந்து புலனாய்வு துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் உதவியுடன் இலங்கையில் தயாரிக்கப்பட்டதும், ஐ.எஸ். அமைப்பால் தயாரிக்கப்பட்ட 'சாத்தானின் தாய்' எனும் வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.





இதையடுத்து இக்குண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு இருப்பதை இலங்கை அரசு உறுதி செய்துள்ளது. 2015 ல் பாரீசில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல், 2017-ல் இங்கிலாந்தில் மான்செஸ்டர் அரினா தாக்குதல், ஓர் ஆண்டிற்கு முன் இந்தோனேசியாவில் தேவாலயங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 'சாத்தானின் தாய்' வெடிகுண்டுகளே பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


பரிசோதனை


ஷாங்ரிலா ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த பயங்கரவாதிகளின் உடல்களை டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஒருவரது உடல் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் ஷக்ரான் காசிம் என கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஷக்ரான் காசிம் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுவிட்டதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X