இந்திய ஜி.டி.பி., வளர்ச்சி 7.1 சதவீதம்

Updated : மே 23, 2019 | Added : மே 23, 2019
Advertisement

நியூயார்க் : நடப்பு, நிதியாண்டில், ஜி.டி.பி., எனும், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.1 சதவீதமாக வளர்ச்சி காணும் என, ஐ.நா., சர்வதேச பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






இந்த வளர்ச்சி, இந்தாண்டு ஜனவரியில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், 7.4 சதவீதம் என, குறிப்பிடப்பட்டிருந்தது. சர்வதேச பொருட்களின் சீரான சப்ளையால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனினும், உலகளாவிய பொருளாதார சூழல், வர்த்தகப் பதற்றம், தேக்க நிலை காரணமாக, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. மதிப்பீடு குறைந்த போதிலும், உலகளவில், வேகமான பொருளாதார வளர்ச்சியில், இந்தியா, சீனாவை விஞ்சி முதலிடத்தில் உள்ளதாக, ஐ.நா., அறிக்கை தெரிவிக்கிறது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது : இந்தியாவில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பொருளாதார வளர்ச்சியில் ஏற்படுத்திய தாக்கம், வெகு விரைவில் மறைந்து விட்டது. மக்களிடம் பெருகி வரும், நுகர்வு கலாசாரமும், அதிகரித்து வரும் தனியார் முதலீடுகளும், இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது.எனினும், தனியார் முதலீடுகளை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும். அத்துடன், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், சுலபமாக கடன் பெறுவதற்கான வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.






தடைக்கற்கள்


இந்த இரு அம்சங்களும், நாட்டின் வேகமான வளர்ச்சிக்கு தடைக்கற்களாக உள்ளன. இவற்றில் கவனம் செலுத்தினால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிக்கும்.ஏற்றுமதியிலும், இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாட்டின் மொத்த ஏற்றுமதியில், 50 சதவீதம், வேகமாக வளர்ச்சி கண்டு வரும் ஆசிய நாடுகளுக்குச் செல்கிறது. அதேசமயம், ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதியில், புவிசார் அரசியல் இடர்பாடுகளும் காணப்படுகின்றன.சர்வதேச பொருளாதார மந்தநிலையால், வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள், அவற்றின் நிதிக் கொள்கைகளை தளர்த்தி வருகின்றன.





இது, சர்வதேச அளவில், பணவீக்கம் குறைந்து, விளைபொருட்கள் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் இல்லாத சூழலில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையாகும்.பொருளாதார வளர்ச்சி வாய்ப்பில், நிலையற்ற சூழல் காணப்படுகிறது. இந்தியா, எகிப்து, நைஜீரியா போன்ற, ஒரு சில வளரும் நாடுகளின் மத்திய வங்கிகள், வட்டி விகிதத்தை குறைத்துள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.உலக மதிப்பீடும் குறைப்பு இந்தாண்டு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 7 சதவீதம்; 2020ல், 7.1 சதவீதமாக இருக்கும். உலகளவில், 2018ல், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 3 சதவீதமாக இருந்தது.

இது, நடப்பாண்டு, 2.7 சதவீதம் ; 2020ல், 2.9 சதவீதமாக இருக்கும். சர்வதேச தொழில் துறையில், உற்பத்தி மந்தமாக உள்ளது. அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக பிரச்னைகளுக்கு, இன்னும் தீர்வு காணப்படாததால், உலகளவிலான பரஸ்பர வர்த்தகம் பலவீனமாக காணப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X