பொது செய்தி

இந்தியா

சங்கிலி பறித்தால் 10 ஆண்டு சிறை

Updated : மே 23, 2019 | Added : மே 23, 2019 | கருத்துகள் (7)
Advertisement

புதுடில்லி : சங்கிலி பறிப்பு திருடன்களுக்கு, 10 ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கும், சட்ட திருத்தத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.






குஜராத் மாநிலத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு மட்டுமல்லாமல், நாடு முழுவதுமே, சங்கிலி பறிப்பு சம்பவங்கள்நடக்கின்றன.சங்கிலியை காப்பாற்ற போராடும் சிலருக்கு காயம் ஏற்படுகிறது.ஒரு சில இடங்களில் உயிரிழப்பு கூட ஏற்படுகிறது.சங்கிலி பறிக்கும் திருடர்கள் மீது, 379வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்தப் பிரிவில், அதிகபட்சமாக, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும்அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், சங்கிலி பறிப்பு சம்பவங்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, கடும் தண்டனை அளிக்க, குஜராத் அரசு முடிவுசெய்தது.கடந்த செப்டம்பரில், 379வது பிரிவுடன், 379(ஏ) மற்றும் 379(பி) ஆகியபிரிவுகளையும் சேர்த்தது.இந்த புதிய சட்டப் பிரிவுகளின்படி, சங்கிலி பறிப்பு திருடன்களுக்கு, குறைந்த பட்சம், 5 ஆண்டுகள் முதல், அதிக பட்சம், 7 ஆண்டுகள் வரை, சிறை தண்டனைவிதிக்கப்படும்.மேலும், சங்கிலி பறிப்பின் போது, சங்கிலியை பறிகொடுத்தவருக்கு, காயம் ஏற்பட்டால், அதிகபட்சமாக, 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.





இதற்கான சட்ட திருத்தம், கடந்த,2018, செப்டம்பரில், சட்டசபையில் ஒரு மனதாக, நிறைவேற்றப்பட்டது.பின், ஜனாதிபதி ஒப்புதலுக்கு அது அனுப்பி வைக்கப்பட்டது. குஜராத் மாநில அரசின், சட்ட திருத்தத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று ஒப்புதல் அளித்தார்.


Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
23-மே-201910:00:37 IST Report Abuse
D.Ambujavalli செயினைத் திருடினால் 5 7 ஆண்டுகள் சாமி, அம்மன் கழுத்து நகைகளைத் திருடுபவர்களுக்கு என்ன தண்டனை?
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
23-மே-201906:46:21 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> பத்துவருசம் ஜாலியா உழைக்காமல் சோறு துண்ணபோறானுக என்பது உண்மை வெளியேவர்ரச்ச திருந்திருப்பானுகளா மக்களும் உடன் உழைக்கவேண்டும் தங்கம் வேண்டாம் போடமாட்டோம் என்று உறுதியா இருக்கலாமே நானெல்லாம் தங்கம் போடுறதேயில்லீங்க அதுவும் வெளியே வர்ரச்ச வெறும் கருக்குமணி நூலில் கோர்த்தது தான் போதுமே சாமி ஏன்னா போட்டுக்கணும் அறுத்துண்டுபோனால் ஐயோ போச்சுதே என்றுஒப்பாரி வைக்கணும் அரைபவுன் ன்னாலும் அறுத்துன்னுபோறானுக கொள்ளையில் போறவனுக கடவுளை அவனுகளை வாழவைப்பதுதான் கொடூரம் எவன் திருடினால் எதை திருடினாலும் தப்பே தான் பசிக்கு கள்ளம் பண்ணாலும்
Rate this:
Share this comment
Cancel
23-மே-201906:17:28 IST Report Abuse
ஆப்பு ஒப்புதல் அளிச்சு ரப்பர் ஸ்டாம்ப் மட்டும் வெக்கக் கூடாது. எத்தனை பேருக்கு தண்டனை கிடைக்குதுன்னு மாசா மாசம் இவரே விசாரிக்கணும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X