பொது செய்தி

தமிழ்நாடு

அகில இந்திய கூடைப்பந்து போட்டி: கோப்பையை வென்றது இந்தியன் வங்கி அணி

Added : மே 23, 2019
Advertisement

பெரியகுளம் : பெரியகுளத்தில் நடந்த அகில இந்திய வைரவிழா ஆண்டு கூடைப்பந்தாட்டப் போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்று பி.டி.சி., நினைவு சுழற்கோப்பையை தட்டிச் சென்றது.பெரியகுளத்தில் 60ம் ஆண்டு அகில இந்திய வைரவிழா ஆண்டு கூடைப்பந்தாட்டப் போட்டி மே 15 முதல் மே 21 மின்னொளியில் துரை ராம சிதம்பரம் நினைவு மைதானத்தில் நடந்தது.

நாக்-அவுட் மற்றும் லீக் சுற்று போட்டியாக நடந்தது. 24 அணிகள் பங்கேற்றன. இதில் மே 18 வரை நடந்த நாக்-அவுட் போட்டியில் 20 அணிகள் வெளியேறியது. மே 19ல் லீக் சுற்று போட்டிகள் துவங்கியது.இதில் பெங்களூரு பாங்க் ஆப் பரோடா அணி, செகந்திராபாத் ஏ.ஓ.ஸி., அணி, சென்னை இந்தியன் வங்கி அணி, புதுடில்லி இந்திய தரைப்படை (ரெட்) அணி ஆகிய நான்கு அணிகள் லீக் சுற்றுப்போட்டிக்கு தகுதி பெற்றன.

இரண்டு நாள் நடந்த லீக் சுற்றுப்போட்டிகளில் அணிகளின் வெற்றிகளின் அடிப்படையில் மே 21 நிறைவுநாளில் மூன்றாம் இடத்தை பிடிப்பதற்கு இந்திய தரைப்படை (ரெட்) அணியும், ஏ.ஓ.ஸி., அணியும் மோதியது. துவக்கம் முதலே முன்னிலையில் இருந்த இந்திய தரைப்படை அணி 105:82 புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. முதல் இடத்தை பிடிப்பதற்கு சென்னை இந்தியன் வங்கி அணியும், பாங்க் ஆப் பரோடா அணியும் மோதியது. நாக் அவுட் மற்றும் லீக் சுற்று போட்டிகளில் தொடர் வெற்றிகளை ருசித்த இந்தியன்வங்கி அணி வீரர்கள் மீண்டும் தங்களது பலத்தை காண்பித்தனர்.

99:61 புள்ளிக்கணக்கில் இந்தின் வங்கி அணி முத்திரை பதித்தது.பரிசளிப்புவிழா: பரிசளிப்பு விழாவிற்கு ஜெ.சி.குழுமம் வர்த்தக பிரமுகர் ஜெ.ேஹமந்த் தலைமை வகித்தார். அருண் மோட்டார்ஸ் உரிமையாளர் பவுன்கோயபல்ஸ் முன்னிலை வகித்தார். முதலிடம் பிடித்த இந்தியன் வங்கி அணிக்கு பி.டி.சிதம்பரசூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பை மற்றும் ரூ.60 ஆயிரம் ரூபாயை,பி.சி.சிதம்பரசூரியவேலு வழங்கினார். இரண்டாம் இடம் பிடித்த பாங்க் ஆப் பரோடா அணிக்கு அழகு சங்கரலிங்கம் நினைவு சுழற்கோப்பை மற்றும் ரூ. 40 ஆயிரத்தை டாக்டர் சி.செல்வராஜ் வழங்கினார். மூன்றாம் பரிசை இந்திய தரைப்படை அணி (ரெட்) நினைவு சுழற்கோப்பை ரூ.30 ஆயிரமும், நான்காம் பரிசினை ஏ.ஓ.ஸி., அணிக்கு நினைவு சுழற்கோப்பை ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது.
இவை தவிர சிறந்த வீரர், சிறந்த அணி உட்பட லட்சக்கணக்கான மதிப்பில் 10 வகையான பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் பி.சி.சிதம்பரசூரிய வேலு, துணை தலைவர் அபுதாஹிர், பொருளாளர் டாக்டர் சி.செல்வராஜ், உறுப்பினர்கள் செய்தனர்.--

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X