பதிவு செய்த நாள் :
லோக்சபா தேர்தல், பா.ஜ., காங்கிரஸ், திமுக கூட்டணி முன்னணி, B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ

புதுடில்லி: நாடு முழுவதும் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வரும் நிலையில், லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி 325 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. இந்த சூழலில் மோடியே மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. கருத்துக்கணிப்பு பொய்யானது நாங்களே ஜெயிப்போம் என மார்தட்டிய காங்., தலைவர் ராகுல் பெரும் பின்னடவை சந்தித்துள்ளார். அவரது பிரதமர் கனவு பலிக்கவில்லை.
லோக்சபா தேர்தல் ஏப்., 11ல் துவங்கி மே 19 வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் காலை முதலே, பா.ஜ., கூட்டணி முன்னிலையில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி 325 க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 90 க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், மற்ற கட்சிகள்

105 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

வாரணாசியில் மோடி அமோகம்


உபி. மாநிலம் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடி 3.85 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் தலைவர் ராகுல் போட்டியிட்ட வயநாடு தொகுதியில் 8 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அமேதியில் பின் தங்கினார்.

காங்கிரசை காப்பற்றிய மாநிலம்


மாநிலங்களை பொறுத்தவரை உபி., மத்தியபிரதேசம், மே.வங்கம், ராஜஸ்தான், மகாராஷ்ட்டிரா, பீகார்,

புதுடில்லி உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் பா.ஜ., கூட்டணியே பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரசை பொறுத்தவரை பஞ்சாப், கேரளா, மற்றும் தமிழகத்தில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. உ.பி.,யில் மாநில முக்கிய கட்சியான சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்தும், பெரும் தோல்வி தான் கிடைத்துள்ளது. இக்கூட்டணியை மக்கள் ஏற்கவில்லை. இடதுசாரிகளுக்கு கேரளாவை தவிர பிற மாநிலங்களில் பெரும் வெற்றி வாய்ப்பு இல்லை.

மம்தாவுக்குஅடிஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மேற்குவங்கதத்தில் பா.ஜ., இதுவரை இல்லாத அளவிற்கு 20 தொகுதிகளை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. மம்தா கட்சி பலத்த தோல்வியை சந்தித்துள்ளார்.

திமுக கூட்டணி முன்னணி


தமிழகத்தில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. திமுக கூட்டணி 37 இடங்களிலும், அதிமுக கூட்டணி தர்மபுரியிலும் , தேனியிலும் மட்டும் முன்னிலையில் உள்ளது. புதுச்சேரியில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.,வுக்கும் அதிமுகவுக்கும் பெரும் தோல்வியே கிட்டியுள்ளது. 22 தொகுதிகளில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுகவும், திமுகவும் சரி சமமாக வெற்றியை பெற்று வருகிறது. இதனால் தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு பெரும் ஆபத்து இல்லை என்றே தெரிகிறது.


Advertisement

வாசகர் கருத்து (128)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
svs - yaadum oore,இந்தியா
24-மே-201912:55:05 IST Report Abuse

svsவெற்றி பெற வில்லையென்றாலும் பா ஜ க மந்திரி சபையில் தமிழ் நாட்டிலிருந்து முன்பிருந்தது போல் வாய்ப்பளிக்கவேண்டும் ......பொன் ராதாகிருஷ்ணன் ஜெயிக்கவியில்லை.. ஆனால் மீண்டும் மந்திரியாவார் என்கிறார்கள் .... அது உண்மையாகவேண்டும் .....

Rate this:
svs - yaadum oore,இந்தியா
24-மே-201912:38:56 IST Report Abuse

svsவட இந்தியா , தென் இந்தியா , ஹிந்திக்காரன் , தமிழ் நாட்டுக்காரன் என்று பேசுவதில் அர்த்தமில்லை ....இப்போது தி மு க ஜெயித்துள்ளது ...அந்த நன்றி மறவாமல் மக்கள் நல பணிகள் மேற்கொள்ள வேண்டும் ......வெகு விரைவில் தமிழ் நாடு திவால் ஆகும் நிலையில் உள்ளது ..ஊழியர் சம்பளம் கூட கொடுக்க இயலாத நிலைமை ஏற்படலாம் ...இப்போதே போக்குவரத்து தொழிலாளர் பென்ஷன் கூட கொடுக்க இயலாத நிலை .....வளர்ச்சி இல்லாமல் வரி வருமானம் இல்லாமல் இதை சரி செய்ய இயலாது ......வரி வருமானம் உயர திட்டங்கள் செயல்படுத்த தி மு க முயல வேண்டும் ....வாழ்க்கை தரம் உயரத்தான் மக்கள் வாக்களித்துள்ளார்கள் ...... அரசு ஊழியர் சம்பளம் உயர்த்துவோம் என்று தி மு க கூறியுள்ளது ...ஆனால் இப்போதைய நிலையில் அரசாங்க கஜானா காலி என்பதுதான் உண்மை ....இதை உடனடியாக சரி செய்ய தி மு க முயற்சிக்க வேண்டும் ...

Rate this:
yaaro - chennai,இந்தியா
24-மே-201910:58:01 IST Report Abuse

yaaroபலூன் பர்னால் ஸ்டாக் பண்ணிக்கோங்க எல்லாரும் ..இன்னும் அஞ்சு வருஷம் ஓடணும்

Rate this:
மேலும் 125 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X