அரசியல் செய்தி

தமிழ்நாடு

கவிழ்ந்த தமிழக தலைகள்

Updated : மே 23, 2019 | Added : மே 23, 2019 | கருத்துகள் (13)
Advertisement
தோல்வி முகம், தமிழிசை, எச்.ராஜா, இ.வி.கே.எஸ்., இளங்கோவன்

சென்னை : தமிழகத்தில் வி.ஐ.பி., வேட்பாளர்களாக பார்க்கப்பட்ட முக்கிய தலைவர்கள் பலர் தோல்வியை தழுவியுள்ளனர். இது அக்கட்சியினரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ., மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி தொகுதியில் பின் தங்கியுள்ளார். அதேபோல பா.ஜ., தலைவர் தமிழிசை, துாத்துக்குடியிலும், அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா காரைக்குடியிலும் பின் தங்கினர். அக்கட்சியின் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை தொகுதியில் பின்தங்கியுள்ளார்.

அதேபோல, பா.ம.க., இளைஞர் அணித் தலைவர் அன்புமணி, தர்மபுரி தொகுதியில் பின் தங்கினார். தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இ.வி.கே.எஸ்., இளங்கோவன் தேனி தொகுதியில் பின் தங்கியுள்ளார்.

இப்படி தமிழகம் அறிந்த பிரபல தலைவர்கள் பலர் தோல்வி முகத்தில் உள்ளனர். இது அக்கட்சி தொண்டர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
24-மே-201908:58:43 IST Report Abuse
Matt P தோல்வியை தழுவிய பிரபலம்களே தோல்வியை கண்டு துவளாமல் உங்கள் பணி தொடரட்டும். ...அடுத்த தடவையாவது நல்லா படிச்சுட்டு பரிச்சை எழுதுங்க .
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
24-மே-201908:47:00 IST Report Abuse
Bhaskaran ராஜா இருக்கும்வரை காவி வளராது ,பேச்சில் முதிர்ச்சி இல்லாத ஆசாமி கேவலமாக போட்டியே தராமல் தோற்றுள்ளார் காவிகாரர்களை மொத்தமாக ஓரம் கட்டியுள்ளனர் இவர்கள் மத்யமந்திரி பதவிக்காக டெல்லிபோவார்கள் தோற்றவர்களுக்கு தரக்கூடாது ,,ராகவன் ,,,வானதி ஆகியோரில் யாருக்கேனும் மந்திரி தரலாம்
Rate this:
Share this comment
Cancel
oce - chennai,இந்தியா
23-மே-201921:17:59 IST Report Abuse
oce தேசிய வாக்காள மக்களின் எண்ண நீரோட்டத்திற்கு புறம்பாக வாக்களிக்கும் தமிழக மக்களுக்கு இனி எந்த விமோசனமும் இல்லை. இவர்களை அப்படி கெடுத்து குட்டிச் சுவராக்கியவர்கள் திராவிட கட்சியினர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X