ராகுலுக்கு காங்., ஓய்வு தரலாம்: பாஜ அமைச்சர்

Updated : மே 23, 2019 | Added : மே 23, 2019 | கருத்துகள் (9)
Advertisement
காங்கிரஸ், ராகுல், பா.ஜ., மம்தா

புதுடில்லி : ராகுல் அரசியலில் இருந்து விலகாவிட்டால், அவருக்கு அக்கட்சி மரியாதையான ஓய்வு அளித்து விடுவது தான் நல்லது என அசாம் நிதியமைச்சரும், பா.ஜ., தலைவருமான ஹிமந்த் பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பா.ஜ., பெற்றுள்ள பிரம்மாண்ட வெற்றி மற்றும் காங்.,ன் படுதோல்வி குறித்து செய்தி சேனல் ஒன்றிற்கு சர்மா பேட்டி அளித்துள்ளார். அதில், ராகுலை நான் இதுவரை 20 நிமிடங்கள் மட்டுமே சந்தித்திருக்கிறேன். அவரை நினைத்தால் எனக்கு பரிதாபமாக உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா, அவரை காங்.,க்குள் தள்ளிவிட்டு விட்டார். அதிகார பின்னணியில் இருந்து வந்தவர் ராகுல். அதனால் அவருக்கு உடன் இருப்பவர்களை மதிக்க தெரியாது.
அவர் அரசியலில் இருந்து விலகவில்லை என்றால், காங்., அவருக்கு மரியாதையான ஓய்வு அளித்து விடலாம். இந்தியாவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு பா.ஜ., ஆட்சி தான் நடக்கும். எதிர்க்கட்சி என்பதே இருக்காது. பா.ஜ., மட்டும் தான் இருக்கும். மோடி தான் பிரதமராக இருப்பார். வாரிசு பின்னணி இல்லாத ஒருவர் காங்., தலைவராக பொறுப்பேற்றால் ராகுலை விட நன்றாக கட்சியை வழிநடத்த முடியும்.
அரசியலில் மம்தாவின் நாட்கள் எண்ணப்படுகின்றன. அடுத்த சில மாதங்களில் அவரின் ஆட்சி கவிழும் என்பதையே பா.ஜ.,வின் பிரம்மாண்ட வெற்றி காட்டுகிறது. அடுத்த 100 நாட்களில் மம்தாவின் ஆட்சி கவிழும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
25-மே-201915:19:08 IST Report Abuse
இந்தியன் kumar இத்தாலிய குடும்பம் விலகினால் காங்கிரஸ் கட்சிக்கு நல்லது.
Rate this:
Share this comment
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
24-மே-201901:16:32 IST Report Abuse
Rajagopal அவர் ஏற்கனவேக் குளிர்ச் சுரம் வந்து நடுங்கி கொண்டிருக்கிறார். ஹெரல்டுக் கேஸ் இப்போதுக் கிலியை உண்டாக இருக்கிறது. செயித்திருந்தால் எவ்வளவு எலும்புக் கூடுகளைப் புதைத்திருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
24-மே-201900:03:54 IST Report Abuse
Subbanarasu Divakaran இந்த பெருந்தகைக்கு ஸ்பெயின் இத்தாலி கொலம்பியா என்று வேறு நாடுகள் தாராளமாக போகலாமே.என்ன வெற்றி aahaa
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X