தனி பெரும்பான்மை பெற்ற 3வது பிரதமர் மோடி

Updated : மே 23, 2019 | Added : மே 23, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
மோடி, லோக்சபா தேர்தல்

புதுடில்லி : நேரு, இந்திராவிற்கு பிறகு லோக்சபா தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று தொடர்ந்து 2வது முறையாக ஆட்சிக்கு வரும் 3வது பிரதமர் மோடி.
நாடு முழுவதும் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ., முன்னிலையில் இருந்து வருகிறது. 2014 லோக்சபா தேர்தலில் பெற்ற 282 இடங்களை விட இது அதிகம். 1951-52 ல் நடைபெற்ற முதல் லோக்சபா தேர்தலில் நேரு 4 ல் 3 பங்கு ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றார். 1957, 1962 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் முழு பெரும்பான்மை பெற்று நேரு வெற்றி பெற்றார். நாடு முழுவதிலும் பல்வேறு மொழி பிரச்னைகள் இருந்த போதிலும் காங்., தனிப்பெரும்பான்மை பெற்றது.
சுதந்திரம் பெற்ற 20 ஆண்டுகளுக்கு பிறகு 1967 ல் நடைபெற்ற தேர்தலில் நேருவின் மகள் இந்திரா 520 ல் 283 இடங்கள் பெற்று வெற்றி பெற்றார். பொதுத் தேர்தலில் இந்திரா பெற்ற முதல் வெற்றி இது. 1971 ல் நடந்த தேர்தலிலும் காங்., மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்ததால் 2010-2014 ம் ஆண்டுகளில் காங்., ஆட்சி பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது. 2014ல் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி 282 இடங்களில் பா.ஜ., தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததால் நிலையான ஆட்சி தர முடிந்தது. தற்போது பா.ஜ., மீண்டும் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
24-மே-201915:47:11 IST Report Abuse
kalyanasundaram IT IS UNFORTUNATE THAT DMK ALREADY TAINTED PERSONS CANNOT MAKE HUGE AMOUNT DUE TO MODI. MORE OVER SWORDS ARE HANGING OVER THEIR HEADS. PC HAS TO CLOSE ALL HIS INGS. NOW CHI WILL BE MORE ACTIVE.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
23-மே-201919:31:19 IST Report Abuse
Bhaskaran ஏழை தொழிலாளர்களை ,விவசாயிகளை நினைத்து அவர்களுக்கு ஏதேனும் நல்லது செய்ய நினைக்கனும் ஜெட்லீயின் யோசனைகளை ஏற்கவேண்டாம் அவர் விவசாயிகள் தொழிலாளர்களுக்கு தன்வாழ்நாளில் நல்லதுசெய்ய நினைக்கமாட்டார் பசியும் அப்படியே
Rate this:
Share this comment
Cancel
natarajan s - chennai,இந்தியா
23-மே-201919:11:43 IST Report Abuse
natarajan s தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே தேசிய நீரோட்டத்தில் இருந்து விலகியே இருந்து விட்டார்கள் இந்த திராவிட கட்சிகளினால் இப்போதும் அதே முடிவு. சென்றமுறை அதிமுக 37 தொகுதி பெற்றும் பலனில்லை, இப்போதும் திமுக ,36 பெற்றும் பலனில்லை. இப்படி வாக்களித்துவிட்டு மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று புலம்பல் நமது M P களும் சுய ஆதாயத்தை மட்டுமே பார்க்கிறார்கள், தமிழக நலன் பின்னுக்கு தள்ள படும் , இவர்களால். ஒரு பிரயோஜனமும் கிடைக்காது தமிழ்நாட்டுக்கு. பாவம் தமிழக மக்கள் தனக்கே சூன்யம் வைத்து கொண்டார்கள்
Rate this:
Share this comment
Thirumoolar - chennai,இந்தியா
23-மே-201920:08:19 IST Report Abuse
Thirumoolarஉண்மை ஆனால் ஒரு உபயோகமும் இல்லை...
Rate this:
Share this comment
Citizen_India - Woodlands,இந்தியா
23-மே-201920:48:10 IST Report Abuse
Citizen_Indiaperfectly said, foolish and mindset issue...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X